பசி(Pasi- Hunger)
- Hashtag Kalakar
- 4 hours ago
- 1 min read
By Dr.B.Senthil Visagan
Stanza 1:
பொருள் வளம் கொண்டு
தீனி சமர்ப்பிப்பவர்களின்
மத்தியில் நான்.
பசிக்கு திருடுபவர்களுக்கும்
திரட்டே பசியாய்
கொண்டு இருப்பவர்க்கும்
வேற்றுமை பல.
Stanza 2:
பொருள் வளம் கொண்டு,
பொருள் வளம் அற்றவராய்
வாழும் ஏழைகள்;
நூறு கோடி இருந்தாலும்,
பசிக்கு குணங்களை அகற்றி,
இலைகளை ஓடி பிடிப்பார்கள்.
Stanza 3:
இதைக் காணும் நான்,
பொருள் வளம் இன்றி,
வெளிச்சத்தில் நின்றுகொண்டே
பசி வெள்ளத்தில் மூழ்குகிறேன்;
என் உடல் இவ்வெளிச்சத்தினால்
ஏற்படும் தாகத்தை போக்க
வேர்வை சிந்துகிறது.
Stanza 4:
மதம்,ஜாதி,மொழி,இனம்,
இடம், பணம்
அனைத்திலும் பெருமை
கொண்டவர்களே,
ஒரு குழவி பசியில்
அழுது கொண்டிருந்தால்
என்ன செய்வீர்கள்?
Comments