தொலை தூரம்
- Hashtag Kalakar
- Dec 6
- 1 min read
By Sanmitha Sree V
தொலை தூரம் செல்ல கண்ணே, வழி ஒன்று சொல்.
வீசும் காற்றில் உன் வாசமில்லா தூரம்.
சுட்டெரிக்கும் தீயில் உன் ஸ்பரிசம் உணரா தூரம்.
ஓடும் நதியோசையில் உன் குறல் கேகா தூரம்.
கால் படும் மண்ணில் உன் கால் தடம் தெரியா தூரம்.
வானத்து மேகத்தில் உன் முகம் காணா தூரம்.
கடல்கள் ஏழு மலைகள் ஏழு என கடந்தாலும்,
மனதின் உன் நினைவுகள் தொலையும் தூரம் உள்ளதா சொல்?
வழி யாதென சொல்?
By Sanmitha Sree V

Good
Good
அருமை
தொலைதூரத்தால் தொலைந்த தொடர்புகளைப் பற்றி, தொன்மையான தொகுப்பில் தொலைந்தே போகும்படி தெரிவித்திர்கள். அருமை..
தொலைதூரத்தால் தொலைந்த தொடர்புகளைப் பற்றி, தொன்மையான தொகுப்பில் தொலைந்தே போகும் படி தெரிவித்திர்கள். அருமை..