கவனிக்க தவறிய சில I Love You கள் - By Rusjanthi Piratheepan
Written By: Rusjanthi Piratheepan
Category: Poetry
Competition: Global Poetry and Creative Writing Competition 2026
Explore the tender intricacies of unspoken love in Rusjanthi Piratheepan's evocative poem "கவனிக்க தவறிய சில I Love You கள்." As a participating entry in the prestigious Global Poetry and Creative Writing Competition 2026, this work delves into the subtle expressions of care that often go unnoticed in our daily lives. Through the lens of Tamil poetry, Rusjanthi captures the gentle nuances and heartfelt moments that convey deep affection without uttering the famous three words.
About the Work
Rusjanthi Piratheepan's poem beautifully highlights the understated moments of love and care that permeate everyday interactions. The work evokes a sense of warmth and nostalgia, illustrating how simple gestures can convey profound emotions. The imagery is vivid, capturing the essence of familial bonds, friendship, and the kindness of strangers. Rusjanthi's literary style is both tender and poignant, inviting readers to reflect on the silent yet powerful messages of love that surround us.
கவனிக்க தவறிய சில I Love You கள்
Original Submission by Rusjanthi Piratheepan
கவனிக்க தவறிய சில i love you கள்
எப்போதும் அவள் வார்த்தைகளில் அக்கறை நிறைந்தே இருக்கும்…
மழை வாற மாதிரி இருக்கு மறக்காம குடையை எடுத்திட்டு போ
மிச்சம் வைக்காம சாப்பிடு
வாகனத்தை பார்த்து மெதுவா ஓட்டு சரியா , என்பாள் அம்மா
அவர் பார்க்கத் தான் அப்படி…
அவன் சாப்பிட்டானா?
எங்க நிக்கிறானாம்
உனக்கு பிடிக்கும்னு தான் வாங்கிட்டு வந்தன் , என்பார் அப்பா
என்ன தான் அடிச்சாலும் பிடிச்சாலும் ஆயிரம் பேருக்கு நடுவில
குள்ளச்சினு சொல்லி அவள பத்திரமா பாத்துப்பான்…
ஒன்னு வேனும்னு அடம்பிடிச்சா எப்படி சரி வாங்கி தந்திடுவான்
எவ்வளவு தான் வளந்தாலும் ஏதும்னா எனக்கு call பண்ணு , என்பான் அண்ணா
எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி எப்போதும் நமக்கு என்று ஒருத்தன் இருப்பான்…
சரி ரீச் ஆயிட்டு call பண்ணு
எதுனாலும் பாத்துக்கலாம் டா
ஒன்னுனா சொல்ல கூட தேவை இல்ல முதல் ஆள வந்து, நிப்பான் நண்பன்
என்கிட்ட இவ்வளவு பணம் தான் இருக்கு நான் பிறகு வந்து வாங்கிறன்
என்றதும் பரவாயில்லை நீ இதை கொண்டு போ என்று சொல்லும் கடைக்காரர்
நீ வந்து இதில் அமர்ந்து கொள்ள என்று இடம் தரும்
பேருந்து பிரயாணங்களில் சக பிரயாணி
கூட இருப்பவர்கள் மட்டுமல்ல
யார் என்ற அறிமுகம் அல்லாதவர்களும் சொல்லி செல்கிறார்கள் i love you களை…
நாம் கவனிக்காமல் கடந்து சென்ற
அந்த சிறிய அக்கறைகளில் எல்லாம்
அவர்கள் சொல்லாமல் சொல்லிய
ஆயிரம் I Love You கள் இருந்திருக்கின்றன.
About the Competition
The Global Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar celebrates the power of the written word, inviting participants worldwide to share their unique voices and perspectives. This esteemed competition provides a platform for poets and writers to express their creativity and connect with a global audience. By showcasing diverse works, the competition fosters a vibrant community of literary enthusiasts dedicated to the art of storytelling.
Thank you, Rusjanthi Piratheepan, for your heartfelt contribution to the Global Poetry and Creative Writing Competition 2026. Your poem, "கவனிக்க தவறிய சில I Love You கள்," offers an insightful reflection on the myriad ways love manifests in our lives. We appreciate your participation and look forward to seeing more of your inspiring work in the future.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments