விடையறியா வினா (VIDAIYARIYAA VINAA)
By Kanagasabai Chandrasekaran
அத்தனை விடியலையும்
தன்னுள் மறைத்து
பாராங்கல்லாய்
நின்ற அந்த ஒருநாள்
கால ஓட்டத்தில்
உருண்டோடி இன்று
கண்ணீராற்றில் கரைந்து
கடலடியில் படிந்தாலும்
தூசியளவேனும்
தூங்கவிடா சிந்தனையாக
மனக்கண்ணில் பதிந்ததை
இன்னும் எத்தனை காலம் கசக்கிக்கொண்டிருப்பேன்.??
குற்றயுணர்ச்சியில் குமைந்திடும்
தனல் என்று தணியும்.??
விடையற்ற வினாவிற்கு
ஒவ்வொரு விடியலுமே
விடை கூற முயல்கிறது.
By Kanagasabai Chandrasekaran

Comments