மகளிர்தின நல்வாழ்த்துக்கள் (WOMENS DAY WISHES)
By Kanagasabai Chandrasekaran
உடலுக்கு உருவம் கொடுத்த
அவளால் தான்
உயிரின்
அத்தனை உணர்வுகளும்
உயிர்ப்புடன் இயங்குகிறது.
எங்கெங்கு
தடைசெய்தார்களோ..
தன்னகத்தே..
தடுத்துக்கொண்டார்களோ..!
அங்கங்கு அசாத்தியமாக
தடம்பதித்து..
சரித்திரத்தின்
அத்தனை பக்கங்களையும்
அலங்கரிக்கும் உங்களுக்கு,
இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள்.!!
"பெண்மையின்றி
ஓருயிரும்
உலகிற்கு அறிமுகமில்லை.
ஏன் உலகமேயில்லை.!"
By Kanagasabai Chandrasekaran

Comments