மின்னுவது எல்லாம் பொன்னல்ல
- Hashtag Kalakar
- May 3, 2023
- 2 min read
By M.I TamimulAnsary
"கூண்டின் வெளியே பார்க்கும் போது பறவையின் கூச்சல் சத்தம் கூட நம் காதுகளில் தேனிசையாய் ஒலிக்கும்.தன் சுதந்திர வாழ்விற்கு முட்டுக்கட்டையாய் தன் கண்ணருகே நிற்கும் கூண்டின் கம்பியை திறந்து எவரேனும் தனக்கு இந்த தனிமை சிறைகளிலிருந்து விடுதலை அளிப்பார்களா? என்ற அந்த பறவையின் பறிதவிப்பான பாவனை கூட பார்க்கும் நமக்கு அது மகிழ்ச்சியாய் இருப்பது போல் காட்சி அளிக்கும்.இரண்டடித்தூர தாழ்த்திறந்தால் தான் வான் செல்லலாம் என்ற தன் சுதந்திரத்திற்காக கூண்டினில் அது நிகழ்த்தும் யுத்தம் கூட நமக்கு நிசப்பதமாய் தோன்றும்! இவ்வாறு அன்றைய நாள் முழுவதும் போராடி உடம்பில் மட்டும்மல்ல,மனதளவிலும் சோர்வு ஏற்பட்டு வழுவிழந்த வாழை இலைப்போல் வாடிப்போய் இருப்பதை கண்ட நமக்கு விளையாடி சோர்வுற்று கிடப்பதாய் எண்ணி அதற்கு உண்ண உணவும்,தாகத்திற்கு நீரையும் வைப்போம்.ஆம்! நிச்சயம் அதற்கு பசியும், தாகமும் தான் ஆனால்,இவை யாவும் அதனை போக்க போவதில்லை? ஏனேன்றால் அதற்கு தேவைப்படுவது சுதந்திரத்தாகமூம், விடுதலைப்பசியும் மட்டுமே...! இதுப்போல தான் நம் வாழ்வும் உடனிருப்போரின் கவலைகளை வெறும் கண்காட்சியாய் பார்ப்போரால் உணர ஒரு போதும் இயலாது.இருப்பினும் உணரவில்லை என்றாலும்? ஒரு சிலரால் அதனை நன்கு புரிந்து கொள்ள முடியும் அப்படியே புரிந்தாலும் புரியாதவனாய் வேடிக்கை பார்த்துவிட்டு அங்கிருந்து விலகிச்செல்வர்.ஏனேன்றால் உதவி என்ற சத்தம் நம் காதுகளில் கேட்கக்கூடாது என்பதற்காக? உதவி என்றதும் பொன்னையும்,பொருளையும் அளித்து , தன் நேரத்தை செலவிட்டு கடிகார நொடி முள்ளாய் அவரையே சுற்றித்திரிவதல்ல! அப்படி எண்ணியே நம்மில் பலர் உதவி என்னும்
வார்த்தையை கேட்கக்கூட விரும்புவதில்லை. உண்மையில் உதவி என்பது உடம்பில் காயப்பட்டவனுக்கு அளிக்கும் சிறு முதலுதவி போன்றது .இங்கு முதலுதவி என்பது நம் நாவிலிருந்து வரும் அந்த கனிப்போன்ற கனிவான வார்த்தைகளே ஆகும். அவை அனைத்தும் காயப்பட்ட உள்ளத்திற்குள் சென்று தேனில் ஊறிய மயில் இறகாள் ஒத்தடம் அளித்தற் போல் அவர்களின் உள்ளம் புத்துயிர் பெற்று மறுவாழ்வு பெறும்.இந்த சாதராண செயலை செய்ய கூட இங்கு யாவர்க்கும் மனமுமில்லை, அதற்கான அவசியமுமில்லை! நம்மை விட அறிவிலும்,உருவத்திலும் சிறிதாய் உள்ள சிறு பறவையே தன் வாழ்விற்காக யுத்தம் செய்யம் போது, எல்லாமிருந்தும் ஒன்றுமில்லாத யாசகனை போல் வேடமிட்டு , கோழை என்னும் போர்வையை போர்த்தி கொண்டிருந்தால் அதனை விலக்கி உனக்கு தைரியம் அளித்து கையில் ஆயுதம் அளிக்க யாவரும் வரமாட்டார் இங்கு? நீயே முயற்சி செய் ! உன் புத்தியே கத்தி அதை தீட்டு !உன் பேச்சே உனது வாள்வீச்சு அதை வீசு! அடைப்பட்ட பறவை என்றோ ஒரு நாள் கூண்டின் கதவு தானாய் திறக்கும் என்றில்லாமால் தான் உடைத்தால் ஒழியே இந்த கதவு திறக்கது என்று தன் வாழ்விற்காக தினந்தினம் போராடுவது போல், நம் இன்னலை இன்பமாய் ஆக்க நாம் அருதினம் முயற்சி செய்ய வேண்டும்.மாறும் ஒருநாள் எல்லாம் ஆனால் ஒரே நாளில் அல்ல! இங்கு உன் முயற்சியும், வேதனையும், கண்ணீரும்,ஏக்கமும் பார்ப்போர்க்கு அந்த பறவையின் நிலைப்போல இன்பமாகவும்,சாதராணமாகவும் நீ மகிழ்ச்சியாய் இருப்பது போலவே தோன்றும் காரணம் அவர்கள் சூழ்நிலையின் காட்சியை பார்க்குமிடத்தில் உள்ளார்கள்.ஆனால் நாமோ! சூழ்நிலையின் கைதியை உள்ளோம் அவ்வளவுதான் வித்தியாசம்.இந்த கைதியின் விளங்காய் அவிழ்க்க கடவுள் வரமாட்டார் .ஏனேன்றால், அதற்கான சாவியை தன்னம்பிக்கை என்னும் வடிவில் உனக்கு அளித்து விட்டார். அதை நீயே! பயன்படுத்தி உனது விளங்கை விளக்கிக்கொள்ள வேண்டும்....!"
By M.I TamimulAnsary

Comments