மௌன கீதம்
Updated: Jul 19, 2025
By Akshaya Varadharajan

மறக்கவில்லை என் நெஞ்சம்
மறைத்தேனே உன்னை கொஞ்சம்
என்னுள் மௌனமாய் நீ பாட
தவித்ததே என் நெஞ்சம்
உன்னை நாட
உதடுகளில் மெல்லிய
புன்னகை நீங்க
ஆயிரம் வார்த்தைகளை
மௌனம் தாங்க
கண்களில் இனியும் ஈரம் இல்லை,
நான் என்ன சொல்ல?
மெதுவாக மழையும்
என்னை வருடிச் செல்ல
கதறி அழுதது என்னுடன் வானும்,
மௌனத்தில் கரைந்தேன் மழையில் நானும்.
By Akshaya Varadharajan

Comments