புத்தகமே புகலிடம் (PUTTHAGAME PUGALIDAM)
By Kanagasabai Chandrasekaran
வாசிக்கையில் வரிக்கு வரி
சிந்தனையின் சிக்கல்கள்
ஒவ்வொன்றாக
அவிழ்க்கப்படுவதும்.,
பிறகு,
அடுத்தடுத்து நாமே
சிக்கலான சிந்தனையில்
சிக்குண்டு சிதைவதும்
என்ன வகையான அனுபவமோ.?
நம்மைப்போல யாரும்
அவதிப்படகவே கூடாது என,
நினைக்கையில் தான்,
என்றோ ஒருவன் தான் பட்ட பெரும்பாடுகளோடு
அங்கங்கு வந்து
நமட்டுச்சிரிப்போடு
புன்முறுவல் காட்டிச்செல்கிறான்.
By Kanagasabai Chandrasekaran

Comments