பெண்ணின் பெருமை
By Jeyanthi R
கருவை சுமக்கிறாய்,
கருத்துடன் வளர்க்கிறாய்,
சிலை வடிக்கும் சிற்பி போல் திகழ்கிறாய்.
உதிரத்தைப் பாலாக்கி உணவுமளிக்கிறாய்.
தடைகளை உடைத்தெறிந்து தடம் பதிக்கிறாய்.
இரக்கத்தின் ஊற்றாய்,
இனிமையில் கரும்பாய்,
தவறுகளில் கண்டிப்பாய்,
தாழ்ச்சியில் முற்றிய நெற்பயிராய் விளங்குகின்றாய்.
களிமண்ணாய் இருப்பவர்களையும் பெயர்த்தெடுக்கிறாய்.
வண்ணமயமான பொம்மையாய் நீ வார்த்தெடுக்கிறாய்.
பெண் கல்வி ஓங்கி இன்னும் உயர வேண்டும்.
அறியாமை முடங்கி இன்றே அழிய வேண்டும்.
அடுப்பங்கரை மட்டும் உன் அகிலம் அல்ல,
நீ இல்லாத் துறைகள் இன்று ஒன்றும் இல்ல.
ஆணுக்குப் பெண் இழிவல்ல என்று,
அனுதினமும் உணர வைக்கிறாய் இன்று.
வீடு முதல் விண்வெளி வரை உன் பங்கு,
விவரிக்க வார்த்தைகள் இல்லை எனக்கு இங்கு.
ஏழேழு பிறவிகளை நான் பெற்றாலும் - இறைவா
பெண்ணாகவேப் பிறக்க ஒரு வரம் தாரும்.
பெண்மை ஒரு தனிமை,
பாரதி கண்ட புதுமை.
பெண்ணே! உன் பெருமைகளை எடுத்துச் சொல்ல,
இவ்வுலகமே அழிந்தாலும் முடிவு என்பதே இல்ல.
நாம் தேடித் தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம்
“தாயின் கருவறை” ...
By Jeyanthi R

Comments