பிஞ்ச செருப்பு (PINJA SERUPPU)
By Kanagasabai Chandrasekaran
செருப்பு
பிய்ந்திடும்போதெல்லாம்
பசைகொண்டு ஒட்டி
பின்னர்
முன்னேற்றப்பாதையில்
எடுத்து வைக்கும் ஓரடியில்
மீண்டும் பிய்ந்துவிடுவது
என்ன வகையான சோதனை.??
பசைக்கு வலிமையில்லையா.?
பிய்ந்த செருப்புக்குத்தான்,
மீண்டும் பயன்பட விருப்பமில்லையா.?
நடையில் தடுமாற்றமா ?
அல்ல ஒட்டிய விதத்தில் பிழையா.??
சிந்திக்கும் நேரத்தில்
பல சித்தரங்கள் நினைவூஞ்சலாட,
பாதம் படாத பாதையின்
தூரம் இன்னும்
குறையவேயில்லை.
ஒட்டாத செருப்பை
தூர எறிந்துவிட்டு
வெறுங்காலோடானாலும்
நடைதொடர்ந்தால்தான்
சரிவரும் போல..!
By Kanagasabai Chandrasekaran

Comments