top of page

நிஜத்தில் ஒரு சினிமா

By Krishna MG



எல்லோருக்கும் பயணங்கள் பண்ண நிறையப் பிடிக்கும். சிலசமயம் அந்த பயணம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையாக இருக்கும், சில சமயம் அந்த பயணத்தை பற்றியே நினைத்துக்கொண்டே இருப்போம். அந்த அளவுக்கு சுவாரஸ்யமா இருந்திருக்கும், பயணத்தின் போது நிறைய புதிய மனிதர்களை பார்க்கலாம்.அப்படி சந்தித்த இரண்டு பேருடைய கதை தான் இது.

சென நடமாட்டம் அவ்வளவாக இல்லாத அந்த ரயில் நிலையத்தில் அவனது கால்கள் தயக்கத்துடன் நடந்து வந்தது.முகத்தில் ஒரு வித குழப்பம், யோசனை. சிறிது தூரத்திலிருந்த ஸ்டேஷன் மேஜையில் அவன் கொண்டுவந்த பையை வைத்துவிட்டு அமர்ந்தான் கண்ணன். அவன் மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள் அவனால் அங்க நடக்கும் எதையும் சரியாகக் கவனிக்க முடியவில்லை ஏதோவொரு குழப்பத்துடன் இருந்தான். தீடிரென்று அவன் கைப்பேசி ஒலிக்க மறுமுனையில் அவன் நண்பன்,

"என்னடா போன காரியம் என்னாச்சு, அப்பா என்ன சொன்னாரு..." "அப்பா சரினு தான் சொன்னாரு பட் அவர்கிட்ட 1.70லெக்ஸ் தான் இருக்கு டா" மீதி பணத்துக்கு என்ன பண்றது தெரியல...என்றான் சரி விடு சென்னை வந்து பேசிக்கொள்ளலாம் என்றான் அவன் நண்பன். என்ன தான் அவன் நண்பன் சமாதானம் சொல்லிப் பேசியிருந்தாலும் கண்ணனுக்கு மனதில் இன்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது.மீதி பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்று. கூட்டம் இல்லாத அந்த ரயில் நிலையமும்,பக்கத்துக் கோவிலிலிருந்து வரும் அதிக சத்தமான பாட்டும் அவன் கவனத்திற்கு வரவே இல்லை.அவன் சிந்தனை எல்லாம் எப்படிப் பணம் திரட்டுவது என்பதிலேயே இருந்தது. அவனது முகம் எதையோ இழந்தது போல வெறிச்சோடி கிடந்தது. அவனுக்கு எப்பொழுதும் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைதான். இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழப்போகிறோம், வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது, அப்பா சம்பாதிக்காத காசு,பணத்தை நாம் எப்படி சம்பாதிப்பது என்று அவனுடைய மனது சிந்தித்துக்கொண்டே இருக்கும்.

எல்லாருக்கும் பணம் முக்கியமான ஒன்று தான் ஆனால் கண்ணனுக்கு இது நிறைய முக்கியம்.வாழ்க்கையில் தான் நிறையக் கஷ்டப்பட்டு இருக்கேன்னு அவன் நினைக்கிறான்.எல்லாருக்குமே தன்னுடைய கஷ்டம் தான் உலகத்திலேயே பெரிய கஷ்டம் அது மாதிரிதான். கண்ணனும் கஷ்டப்பட்டு நேர்மையாக பணம் சம்பாதிக்க ஆசை. ஆனால் அந்த பணத்தை எப்படி எந்த வழியில் கஷ்டப்பட்டுச் சம்பாதிப்பது என்று தெரியாது. வாழ்க்கையில் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் பணக்காரன் ஆகவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும் அதற்கான முயற்சியைச் சிலர் எடுப்பார்கள் சிலர் எடுப்பதில்லை.

அவனுக்குப் பயம். இந்த உலகத்தைப் பார்த்து, இந்த உலகத்தில் வஞ்சகர்கள் அதிகம். ஒருவன் தடுக்கி விழுந்தால் அவனைப் பார்த்துச் சிரித்து அவனை குறை சொல்ல இந்த உலகம் ஆவலாக இருக்கும்.ஒருவன் கஷ்டப்பட்டு முன்னேறினால் அவன் பட்ட கஷ்டத்தைப் பற்றி நினைக்க மாட்டார்கள்,எப்படிப் பணம் சம்பாதிக்கிறான் நிறையச் சுலபமாகப் பணம் சம்பாதிக்கிறானோ என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அந்த இடத்திரக்கு வர அவன் பட்ட கஷ்டத்தையும் அவமானத்தையும் யாருமே நினைத்து பார்ப்பது இல்ல.

நீண்ட நேரச் சிந்தனைக்குப் பிறகு ரயில் வண்டி வரும் சத்தம் கண்ணனுக்குக் கேட்டது அவன் சுயநினைவுக்கு வந்தான்.தூரத்திலிருந்து வந்த ரயில், நிலையம் அருகில் வர வர கண்ணனும் தன்னுடைய பையை எடுத்து தயாராக நின்றான் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும் தன்னுடைய இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்தான் . அவனுக்கு ஐன்னலோர‌ இருக்கை கிடைத்தது.அந்த கம்பார்ட்மெண்ட்டும், ரயில் நிலையம் மாதிரியே வெறிச்சோடிப் போயிருந்தது. இவன் மேல் இருக்கையில் ஒரு ஆள் படுத்திருந்தார். மூன்று பேர் அமரும் வரிசையில் ஒரு பெண் மட்டும் தனியாக இருந்தால். பக்கத்து இருக்கையில் இன்னும் சில பேர் இருந்தனர். ரயில் புறப்பட ஆயத்தமானது,கண்ணன் தன்‌ இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அவ்வப்போது தலையைத் திருப்பி அந்த பெண்ணையும் பாத்துக்கிட்டு இருந்தான். அந்த பெண் சோகமா இருந்தாள் காரணம் என்னவென்று தெரியவில்லை கண்ணனுக்கு. ரயில் கொஞ்ச தூரம் போகக் கண்ணனுக்குப் பசிக்க ஆரம்பித்து கையில் சாப்பாடும் இல்லை என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வேடிக்கை பார்த்தவாறு இருந்தான்.

பொதுவாக கண்ணன் மற்றவர்களைப் பற்றி கவலைப்படும் ஆள் கிடையாது, ஏனென்றால் இந்த சமுதாயத்தைப் பற்றி அவனுக்கு நன்றாக தெரியும் இந்த சமுதாயம் என்பது நான்கு செல்வாக்கு பெற்ற மனிதர்கள் தான், தங்களுக்காக ஒரு சட்டம் அந்த சட்டத்தையும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் மட்டுமே செழிப்பாக இருக்க என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள், மற்றவர்களைப் பற்றி துளியும் கவளை இருக்காது மற்றவர்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள மாட்டார்கள். கண்ணன் இந்த சமுதாயத்தைப் பார்த்துப் பயப்படாத ஒருவன் ஆனால் அவனுக்கும் ஒரு பயம் இருந்தது எதிர்காலத்தைப் பற்றி.

சிறிது நேரத்திற்குப் பிறகு கண்ணன் தன்னுடைய பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான்,அது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், அதை வாசிக்க ஆரம்பித்தான், வாசிக்க வாசிக்க அதில் மூழ்கி விட்டான், கல்கியின் எழுத்துகள் அப்படி. ரயில் திண்டுக்கல் நிலையத்தை வந்து நின்றது கண்ணனுக்கு மீண்டும் பசி நினைவிற்கு வந்தது. ரயில் நின்றதும் கீழே இறங்கி நிலையத்தில் ஒரு கடையை நோக்கி வேகமாகச் சென்றான்.

“அண்ணா 4இட்லி பொட்டலம் பண்ணி குடுங்க”

என்ற வாங்கிக்கொண்டு வேகவேகமாக ரயிலில் ஏறி தன் இடத்தில் அமர்ந்தான். எவன் வந்தால் என்ன‌ போனா என்ன. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள், ஆனால்‌ இது எதையும் அவன் கவனிக்கவே இல்லை.வேகமா வேகமாக அந்த பெட்டலற்ற பிரித்துச் சாப்பிட ஆராமபீதான்‌ அந்த இட்லியும்,சாம்பாரும் அவனை வேறு எதையும் கவனிக்கவிடவில்லை, கண்ணனுக்கு இட்லி மிகவும் பிடிக்கும் ஆனால் அது காரணமில்லை அவனது பசி அவன் குடலைத் தின்றுவிடுவது போல் இருந்தது. கண்ணன் சாப்பிட்டு முடிக்கவும் ரயில் ஹாரன் அடிக்கவும் சரியா இருந்தது ஜன்னல் வழியா அவன் சாப்பாடு பொட்டலத்தை வேளியே வீசி விட்டு கையை‌ கழுவி பெருமூச்சு விட்டு அமர்ந்தான் கண்ணன்.

ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் கண்ணன் தனக்கு எதிரில் இருந்த பெண்ணனின் சோர்வான முகத்தைக் கவனிக்க ஆரம்பித்தான், தன்னிடமிருந்த இருந்த குழப்பத்தை விட அவள் மிக குழப்பமாகக் காணப்பட்டால். அந்த பெண்ணிடம் பேசலாமா வேண்டாமா என்று சிறிது யோசித்தான் அவளிடம் பேச முயற்சித்தான் கண்ணனுடைய இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது கைகளில் நடுக்கும், மின்னப் பின்ன கண்ணன் இது மாதிரி தெரிய நபரிடம் அதுவும் பெண்ணிடம் அவனே வழியச் சென்று பேசியதில்லை இது எதையும் தன்னுடைய முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு‌ வழியாக தைரியத்தை வரவழைத்து

"தமிழா?"

என்று அந்த பெண்ணிடம் கேட்டான் அந்த பெண்ணும் தலையை தூக்கி ஆமாம் என்றால்.

“ஏன் சோகமா இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா ரொம்ப டல்லா இருக்கீங்க ஏதோ தனியா பீல் பண்றீங்க? எனக்கு கேக்கனும்னு தோணுச்சு அதான் கேட்டேன்”‌ என்றான் கண்ணன்.

அவள் சற்று தயக்காதுடன்,

“நான் பொள்ளாச்சியில் ட்ரெயின் ஏறும்போது என் கூட நாலு பேர் ஏறுனாங்க எங்களத் தவிர இந்த கம்பார்ட்மெண்ட்ல யாருமில்ல. கொஞ்ச நேரம் நல்லா தான் பேசிக்கொண்டு வந்தாங்க ஆனா திடீரென்று ஒருதர் என்கிட்ட தொலைப்பேசி நம்பர் கேட்டார்கள் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல நான் அப்படியே அமைதியாயிட்டேன் அதுக்கு அப்புறம் நான் அவர்கிட்ட பேசல” என்றாள் அந்த பெண். கண்ணன் உடனே யார் அது என்று கேட்டான் அந்த பெண் தலையைத் தூக்கி மேலே என்று சமிக்கை காட்டினாள். கண்ணனின் படுக்கைக்கு மேல் படுக்கையிலிருந்த நபர் தான் அந்த பெண்ணிடம் நம்பரைக் கேட்டுள்ளார். கண்ணன் அந்த பெண்ணிடம் “கவலைப்படாதீங்க நான் நம்பர் எல்லாம் கேட்க மாட்டேன் தாராளமாக என் கிட்ட பேசலாம்” என்று சிரித்துக் கொண்டே கூறினான் இருந்தாலும் அந்த பெண்ணின் முகம் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே சோர்வாக இருந்தது அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகி விட்டான் கண்ணன்.

சிறிது நேரம் கழித்து, அவளிடம் பேச வேண்டும் என்பதற்காக மை நேம் இஸ் கண்ணன் என்று ஆரம்பித்தான் எனக்கு தெரியும் டி டி ஆர் சொன்னதை கேட்டேன் என்றாள்.

“உங்க பேர் என்ன?”

என்று கண்ணன் கேட்க அவள் சற்று தயங்கினாள்,

“பரவால சொல்ல இஷ்டம் இல்லனா சொல்ல வேண்டாம்”

“அப்படி இல்லா என் பேர் அபி”

“உண்மையான பேர் தானா? இல்லா சும்மா சொல்றீங்களா?”

“என்னோட ஐ டி கார்ட் பாகிருங்கள?” என்று அபி வேகமாக கேட்டாள்.

“நோ நோ நான் விளையாட்டுக்கு சொன்னேன் டோண்ட் டேக் சீரியஸ்” கண்ணன் கூலாக அவளிடம் கூறினான். “உங்களுக்கு பிரட்சனை இல்லனா என்கூட பேசிட்டு வரலாம்?”கண்ணன் கேட்ட அடுத்த நொடி அவள் சிறிது தலையாட்டினாள்.சினிமாவில் கண்ட காட்சி நிஜத்தில் நடக்கிறது என்று கண்ணனுக்கு தோன்றியது. கதாநாயகன்,கதாநாயகி முதல் முறை சந்திப்பது அவர்களின் உரையாடல்,நெருக்கம் அது மாதிரி. ஆனால் கண்ணனுக்கு என்ன பேச எப்படிப் பேச என்று தெரியவில்லை அதனால் மீண்டும் ஒரு அமைதி நிலவியது அவர்களுக்கிடையில். நீங்க என்ன பண்றீங்க என்று முதலில் அபி ஆரம்பித்தாள்.

“நான் சென்னைல பிசினஸ் பண்ணிகிட்டு இருக்கேன் இது என் நேட்டிவ்‌ ஒரு வேலை விஷயமா இங்கே வந்தேன் இப்ப சென்னை போய்கிட்டு இருக்கேன்,நீங்க எங்க இருக்கீங்க?”

“நான் செங்கல்பட்ல இருக்கேன்.ஆனா நான் பொறந்தது வேற இடம் படிச்சது வேற இடம் இப்போ இருக்கிறது வேற இடம்.”

“அப்போ உங்களுக்கு நிறைய பிளேஸ் தெரியும்” என்றான் கண்ணன்.

“அப்படியலம் இல்லா எதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் நான் படிச்சதும் எல்லாம் சென்னைல தான் அம்மா அப்பா கூட அதிகமாக இருந்தது இல்லா எனக்கு அது பழகி போய்டுச்சு ஒரு தங்கச்சி ஒரு தம்பி” என்று கண்ணனிடம் கூறினாள்.

இவற்றை எல்லாம் கேட்ட கண்ணன் தன்னை பற்றியும் அவளிடம் கூறினான். கண்ணன் பொதுவாக யாரிடமும் தன் முழு விவரத்தையும் கூற மாட்டான் அவன் யாரையும் நம்புவதும் இல்லை இவளிடமும் தன்னை பற்றி அரைகுறையாகவே கூறினான்.

கண்ணனும் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் நெருக்கம் காட்டினான். பேச்சில் மட்டும் தான். இரண்டு பேரும் சோகம் மறந்து ஒருவருக்கொருவர் மிக இயல்பாகப் பேச ஆரம்பித்தனர்.

கண்ணனுக்கு அப்பியை மிகவும் பிடித்திருந்தது காரணம் அவளுடைய சாதுவான பேச்சு. பேசலாமா வேண்டாமா என்று யோசித்த பெண் இப்போது நிறுத்தமால் பேசிக்கொண்டே வந்தாள்.

மணி 10.30 இருக்கும் இரயில் திருச்சி நிலயத்தினுக்கு வந்தது அப்போது தான் கொஞ்சம் கூட்டம் ஏறியது. கூட்டம் வருவதால் அபி எழுந்து சென்றுவிடுவாளோ என்று கண்ணனுக்குக் கவலை வந்தது ஆனால் அபி அங்கு இருந்து செல்லவில்லை, மாறாக உங்களைப் பற்றி எதாவது சொல்லுங்கள் என்றாள். கண்ணனுக்கு இனம் புரியாத ஒரு சந்தோசம். கண்ணன் மின்னப் பின்னத் தெரியாத பெண்ணிடம் இவ்வளவு சகஜமா பேசியதில்லை ஆனால் அபியிடம் வெகுநேரம் பேசிக்கொண்டு வந்தான்.

“என்ன பத்தி சொல்ல பெருசா எதும் இல்லா எனக்கு மூவீஸ் ரொம்ப பிடிக்கும்,எனக்கு டைரக்டர் ஆகனும்னு ரொம்ப ஆசை ஒரு நாள் கண்டிப்பா அது நடக்கும்”

“டைரக்டர் ஆனதும் எங்கள மறந்துடாதீங்க”

“அது என்ன எல்லாரும் இதையே சொல்றீங்க நான் இப்போ எப்படி இருகண்ணோ அப்படி தான் எப்பவும் இருப்பேன்”

“கவலை படாதீங்க எல்லாம் நல்லதா நடக்கும் கடவுள் நீங்க நினைக்கிற எல்லாத்தையும் உங்களுக்கு கொடுப்பாரு”

“கடவுளா? எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.”

தனக்கு ஆசைப் பட்ட எதுவும் நடக்கவில்லை அதனால் கடவுள் என்று யாரும் இல்லை என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டான் கண்ணன். கடவுள் பற்றிய பார்வை ஒருவருக்கொருவர் மாறுபட்டது. கண்ணனுக்கு அது மிகவும் மாறுபட்டது.

“ஏன் இல்ல, எதாவது காரணம் இருக்கும் சொல்லுங்க”

“கடவுள்னா என்ன? மனுஷன மனுஷன் பிரிச்சு அத வச்சு சண்டை போடுறது தான் கடவுளா இங்க எதும் சரி இல்லா கஷ்ட படுறவன் இன்னும் கஷ்டபடுறான் ஏமாத்துறவன் நல்ல இருக்கான் அப்புறம் என்ன கடவுள் அது.”

“உங்களுக்கு பெரியார் ரொம்ப புடிக்குமா?”

“ஏன் நான் கடவுள் மறுப்பு பேசுறதுனால கேக்கறீங்களா?”

“அப்படி இல்லா பெரியார புடிச்சவங்களுக்கு கடவுள் புடிக்காது அதான் கேட்டேன்.”

சிரித்துக்கொண்டே “ஆமா எனக்கு புடிக்கும்” என்றான்.

கடவுள் ஒரு நம்பிக்கை அவ்ளோ தானே தவிர வேற எதுவும் இல்லை என்றாள் அபி.

“சரி நம்பிக்கைதான் நான் அக்சப்ட் பன்னிக்கிறேன் எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கு கோவில்ல இருக்க கல்லு கடவுள் இல்லா நமக்கும் மேல ஒரு பவர் இருக்கு, இல்லனு நான் சொல்ல வரல ஆனா அந்த பவர் கடவுள் கிடையாது. இப்போ நான் கஷ்டத்துல இருக்கேன் எனக்கு ஒருத்தன் உதவி பண்றானா அவன் தான் எனக்கு கடவுள்.”

“அதை தான் நானும் சொல்றேன் கடவுள் நேர வர மாட்டரு மனுஷனதான் அனுப்புவார்.”

கண்ணன் சிரித்துகொண்டு “இங்க பாருங்க அன்பு மட்டும் தான் கடவுள் வேற எதும் இல்ல, ஒருத்தருக்கு பதில் இன்னொருத்தன அனுப்புறதுக்கு இது கேம்ஸ்ல வர சப்சிடியூசன் இல்லை”

அபியும் கண்ணனிடம் விட்டு கொடுப்பதாக தெரியவில்லை உங்க பேர்ல கண்ணனை வெச்சுகிட்டு இப்படி பேசுறீங்க என்றாள்.

“எனக்கு விவரம் தெரியாத அப்போ வெச்ச பேரு அதான் அப்படியே விட்டுட்டேன்” என்றான் கண்ணன்.

“ஏன் கடவுள் மேல இவ்வளவு வெறுப்பு”

“வெறுப்பு எதும் இல்ல எனக்கு பெரியார் ரொம்ப புடிக்கும் நீங்களே செல்லீட்டீங்க, அதோட வாழ்க்கைல நான் பார்த்த சம்பவம் எல்லாமும் இதுக்கு காரணம். இதுக்கு மேல இத பத்தி பேசவேண்டாம்‌” என்றான்.

இருவரும் யாரைப் பற்றியும் கவலையில்லாமல் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள் ரயில் திடீரென்று நின்றது கண்ணன் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான் வண்டி சிக்னலுக்காக நின்றது. மீண்டும் அப்பியை பார்த்தான் சிறிது நேரம் அமைதி நிலவியது அவர்களுக்கிடையில். கண்ணனும் அப்பியும் பார்த்துப் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“கடவுள் பத்தி தான் பேச வேண்டானு சென்னேன் என்றான் கண்ணன்.

“யாரையாவது லவ் பன்றீங்களா” என்றாள்.

பிரச்சினைக்கு வந்துடீங்களா என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

இதுவும் தமிழ் சினிமாவில் ஒரு அங்கம், ஆமாம் கதாநாயகன் கதாநாயகி பார்த்துப் பேசிய சிறிது நேரத்தில் அவர்களுடைய அடுத்த கேள்வி “நீங்க யாரையாவது காதலிக்கிரீங்களா?” அங்க கேட்டப்பதற்க்கு காரணம் கதாநாயகன் கதாநாயகி காதலிக்கக் காதலிக்கப் போகிறார்கள்!

“ஏன் கேக்கிரீங்க”

“இல்லா சும்மா தான், தோனுச்சு! இது ஜென்ரல் டாப்பிக் அதான் கேட்டேன்.”

கண்ணன் அபியை பார்த்து சிரித்தான்.

“ஏன் சிரிக்கிரீங்க”

“இல்லா எனக்கு பாஸ்ட் ல ஒரு லவ் இருந்துச்சு இப்போ இல்ல 4இயரஸ் ஆய்டுச்சு பட்‌ நான் அத பேச விரும்பல”

“இல்ல நான் சும்மா தான் கேட்டேன் நீங்க சொல்ல வேண்டாம்”

“நீங்க சிங்கள் தான?”

“ஆமாம் எப்படி கண்டுபிடிச்சிங்க”

“எனக்கு ஜோசியம் தெரியும் அதான் சரியா கண்டுபிடிச்சுட்டேன்”

நான் இதுக்கு சிரிக்கணுமா என்று கேட்டு முறைத்தாள்.

“இல்லா 4மணி நேரமா ஒரே கம்பர்ட்மெண்ட்ல இருக்கோம் உங்களுக்கு ஒரு கால் ஒரு மேசேஜ் கூட வரல அதன் நான் கெஸ் பண்ணேன்”

“ஓ.... அப்படியா இங்க சிக்னல் இல்ல அதான் எனக்கு மேசேஜ்,கால் எதுமே வரல சோ நானும் ரிப்லே பண்ணல, நீங்க திங்க் பண்றது சில்லியா இருக்கு மிஸ்டர் கண்ணன்” என்றாள் அபி.

கண்ணன் அவளை குறுகுறுவென்று பார்த்தான்.அபி கண்ணனை பார்த்து பொய்யாக சிரித்தாள்,

“அப்போ நீங்க கமிட்டடா? என்று கண்ணன் கேட்டான்.

அபி சத்தமா சிரித்து இல்லா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நன் சிங்கல் தான் என்றாள்..



“முதல்ல உங்கள பாக்கும் போது ரொம்ப அமைதியா சோகமா இருந்திங்க இப்போ என்னையவே கிண்டல் பண்றீங்க”

“எனக்கு இந்த லவ்ல இன்ட்ரஸ்ட இல்ல ஏன்னு கேகாதிங்க தெரியாது. ஒருத்தர ஒருத்தர் ஏமத்துற மாதிரி இருக்கும், நடிப்பாங்க. எனக்கு அது புடிக்கல”

“ஆம்பளைங்க எல்லாரும் ஒரே மாதிரியானவங்குனு நினைக்கிற ஆளா?”

“நோ நோ அப்படிலாம் நினைக்கற ஆல் இல்ல எனக்கு இன்னும் யார் மேலையும் லவ் வரல அவ்வளவு தான்”

மீண்டும் ஒரு அமைதி நிலவியது அவர்களுக்கிடையில். கண்ணன் தன் கைபேசியை எடுத்து மணி பார்த்தான் 11.30 அபியிடம் பசிக்கலையா உங்களுக்கு நீங்க இன்னும் சாப்பிடவே இல்லை என்றான்.

“இல்லங்க பசிகல நான் டிராவல் பன்னும்போது சாப்பிடமாட்டேன். பட் என்கிட்ட சப்பாத்தி இருக்கு பசிக்காம நான் சாப்பிட மாட்டேன்”

“எனக்கு செம பசி! நீங்களே பாதிங்களே யார் சாப்பிட்டா என்னனு, நான் நல்லா சாப்பிட்டேன்” என்று கிண்டலாக கண்ணன் கூறினான் அபி கண்ணனை பார்த்து சிரித்தாள்.

“செங்கல்பட்டுல எங்க தங்கி இருகிங்க?”

“நான் ஹாஸ்டல்ல தான் இருக்கேன் நான் ஒர்க் பன்ற இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கு. அங்க பசங்க கூட்டமாவே இருக்கும் நைட் பகல் எப்பவும்.”

“லேடீஸ் ஹாஸ்டல் இருந்து அங்க நிறைய பசங்க இருக்கத்தான் செய்வங்க”

“எனக்கு ஒரு டவுட் கேட்கவா?”

“தரலாமா கேளுங்க!”

“வாட் யூ திங்க் அபவ்ட் செக்ஸ்?”

கண்ணனுக்கு மானதிறக்குள் கேள்வி மேல் கேள்வி எதற்கு இவள் இதைப்பற்றி கேட்கிறாள், ஒரு வேலை அது மாதிரி இருக்குமோ, ஒரு வேலை இது மாதிரி இருக்குமோ என்று இவை எதையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல் சற்று அமைதியாக அவளைப் பார்த்தான்.

செக்ஸ் இந்த தலைமுறை இளைஞனுக்குச் சாதாரணமான விஷயம், அவனுக்கும் தெரியும் இருந்தாலும் முதல் தடவை ஒரு பெண் சந்தித்த சிறிது நேரத்தில் இப்படி கேட்டால் சிறிது தயங்கத்தான் செய்வார்கள் யாராக இருந்தாலும்.

“தப்பா எதும் நினைக்காதீங்க என் கூட கார்த்திக்னு ஒரு பையன் ஒர்க் பன்றான் நாங்க எல்லாம் ப்ரெண்ட்ஸ் தான் பட் அவன் என்கிட்ட மட்டும் நிரிய டைம் ஸ்பென் பன்னுவான்.”

“சரி அதுக்கும் நீங்க கேட்டதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு சொல்லுங்க”

“அவன் லைஃப்ல நடந்த எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லுவான் இன்க்குலுடிங் அவன் லவ் பன்ன பொண்ணு கூட செக்ஸ் வச்சுகிட்டது வரைக்கும்”

“நீங்க என்ன சொல்ல வரிங்க எனக்கு புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”

“இல்ல எனக்கு ரெண்டு கெஸ்டீன் இருக்கு ஒன்னு, அவன் ஏன் என்கிட்ட இத சொல்லணும், ரெண்டாவது அவன் ஏன் என்கிட்ட மட்டும் இத சொல்லணும்”

“இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் குடுத்தீங்க இது ரொம்ப சாதாரண விஷயம். ஒன்னு அவன் உங்கள ரொம்ப நம்பனும் அப்படி இல்லையா அவன் உங்கள லவ் பன்னனும் நீங்க வேணும்னா அவன்கிட்ட கேட்டு பாருங்க பிகாஸ், தான் லவ் பன்ற பொண்ணு தன்னை பத்தி எல்லாமே தெரிஞ்சுகனும்னு பசங்க ஆசை படுவாங்க அதான் சொன்னேன்”

“அப்படியா சொல்றீங்க ஆனா எனக்கு அப்படி தோனல”

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பசங்க பொண்ணுங்க கிட்ட தன்ன பெரிய ஆளுனு காடிக்க நினைப்பாங்க அதுனால கூட உங்ககிட்ட இத சொல்லீருக்கலாம் அண்ட் தெரியாத ஒன்ன தெரியும் சொல்லுவாங்க பன்னாத ஒன்ன பன்னேனு சொல்லுவாங்க அதான் பசங்க. அது மாதிரி தான் இதுவும் நான் எல்லாமே பண்ணிட்டேன் அவன் உங்ககிட்ட காட்டிகணும் கூட சும்மா சொல்லிருக்கலாம்.”

“ஆமா சொல்லீருக்கலாம்...” என்று இழுத்தவாரு கண்ணனை பார்த்து “நீங்க வர்ஜினா” என்று கேட்டாள் கண்ணன் வெட்க்கதுடன் சிரித்து கொண்டு ஆமா என்றான்.

“இதையே நான் உங்ககிட்ட கேட்டா தப்பாயிருக்கும்ல”

“பொண்ணுங்ககிட்ட இதை கேக்குற தைரியம் பசங்களுக்கு இருக்கா?”

“எனக்கு இருக்கு ஆனா கேட்க விருப்பம் இல்ல”

அபி கண்ணனை மலைப்பாக பார்த்து கொட்டாவி விட்டாள்.

“என்ன தூக்கம் வருதா?”

“லைட்டா வருது பரவால உங்க தூக்கத்தை கெடுத்துட்டு நான் தூங்குனா நல்லா இருக்காது இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம். வேற என்னாலம் புடிக்கும்?”

“எனக்கு போட்டோகிராப்பி ரொம்ப புடிக்கும்”

“வாவ் என் தம்பி கூட நல்ல போட்டோ எடுப்பான்.”

“உங்க தம்பி அளவுக்கு இல்லனாலும் எதோ நானும் கொஞ்சம் நல்ல போட்டோ எடுப்பேன்” என்று சிரித்தவாறு சொன்னான்.தன்னுடைய மொபைல் எடுத்து தான் எடுத்த போட்டோ எல்லாம் அபியிடம் காட்டிக்கொண்டு இருந்தான். போட்டோகளை பார்க்க பார்க்க அவளுக்கு கண்கள் இரண்டும் செக்கியது அவளுக்கு தூக்கம் வருவது உணர்ந்து “உங்களுக்கு தூக்கம் ஹெவியா வருது போல தூங்குங்க” என்றான் கண்ணன். சரி என்று எழுந்தாள் அபி, உண்மையில் தூக்கம் வந்தது கண்ணனுக்குதான் ஆனால் அவன் வெளி காட்டிக்கொள்ளவில்லை.

நேரம் சரியா இரவு 12.35 என்ன தான் தூக்கம் வந்தாலும் கண்ணனுக்கு அவளிடம் இன்னும் பேச வேண்டும் என்று இருந்தது. இது தான் அவனுக்கு முதல் அனுபவம். அபி மேலே ஏறி அவள் படுக்கையில் படுதாள். அவள் படுக்கும்வரை கண்ணன் அவளை பார்த்துவிட்டு இவனும் படுத்தான். படுத்த கணத்தில் இருவரும் தங்களுக்குள் இருந்த கவலை அனைத்தையும் மறந்து உறங்கினர். எல்லோரும் சொல்வது போல தான் கவலை, துக்கம் எதும் பெரிய விஷயம் இல்லை, அத நாம் கடந்து வந்துவிட்டால்.

அவர்களுடைய இரவு ஒரு கனவு போல அந்த ரயிலில் மிதந்து சென்னை வந்தது.

காலை 6.15க்கு ரயில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை வந்தடைந்தது. அபி கொஞ்சம் முன்னதாகவே எழுந்துவிட்டால் போல தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு இறங்க ஆயத்தமானல். கண்ணன் தூங்குவதை பார்த்து அவனை தட்டி எழுப்பி வீட்டுக்கு போய் தூங்குங்க என்றாள். கண்ணன் புன்னகையுடன் எழுந்து அபிக்கு குட்மார்னிங் என்றான். ரயில் ஸ்டேஷன் வந்தடைந்தது அபி அவனுக்கு பாய் சொல்லிவிட்டு இறங்கி ந டந்தாள்,கண்ணன் தன் பையை வேகமா எடுத்துகொண்டு ரயிலிலிருந்து இறங்கி அபியை பார்த்தவாறு நின்றான் அபி அவனை திரும்பி கூட பார்க்காமல் சென்றாள் கண்ணனும் தன் வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

கண்ணனுக்கு அவளிடம் நம்பர் வாங்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது அப்படிக் கேட்டிருந்தால் கண்ணனும், ரயிலில் சந்தித்த முதல் நபரும் ஒன்று தான் என்று தோன்றியிருக்கும் அதனால் கண்ணன் அவளிடம் நம்பர் கேட்கவில்லை.

கண்ணனுக்கு என்னதான் வருத்தம் இருந்தாலும் ஒரு சந்தோசம், சோகமாக இருந்த பெண், பாதுகாப்பு இல்லை என்று நினைத்த பெண் 6மணி நேரம் நிம்மதியாக பாதுகாப்பாக இருந்தால் என்று கண்ணனுக்கு நன்றாகவே தெரிந்தது.

எல்லாம் இங்க சாதாரணம் தான் ஆனால் அதை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது தான் முக்கியம்.

அந்த ஒரு சாதாரண சந்திப்பு கண்ணன் வாழ்க்கையில் மறக்கமுடியாத சந்திப்பாக மாறிவிட்டது.

ஆனால் அபிக்கு எப்படியென்று தெரியவில்லை…




A movie in reality

Everyone like to travel around . sometimes, some journeys are unexpectedly irritable one. In some cases, some other journeys are remember able one because of some wonderful moments experienced and may come across many people. Likewise, it is the story of two people who met each other.

His legs stepped hesitating in the deserted railway station. His face seems to be confused and thoughtful. He is one, kannan. He placed his bag on the bench and rested there.

His mind is full of confused thoughts; even couldn’t cope up with his surroundings. Suddenly, mobile rings and the calling friend initiates,

“ what’s the matter? What about your dad?”

“he agreed but he have only 1.7 lakhs . I don’t know how to proceed for the balance amount” kannan said.

His friend convinced him to reach Chennai as first and then let’s move this further.

Whatever, those consoling words doesn’t make him calm down from thinking about the balance amount.

Empty station and a loud song explodes from the speaker nearby temple didn’t grab his attention. His mind is full of balance amount to be gathered. He looks to be exhausted as like he lost something. He is always worried about his life. How we will be surviving this life, how to improve ourselves, how to earn money ever like our dad are the only thoughts for now.

Money is necessary for everyone but it is more essential one for kannan. He thinks that he suffers a lot in life. Its something like one’s situation is the world’s biggest worst situation as people thinks generally. Kannan wants to work hard sincerely and earn more. But he don’t have any idea about how to earn money. Everyone wishes to work hard and to become a millionaire. But only few practices to be and some don’t.

Kannan is scared of this society. Many cheaters are here. If one falls down, there are many who is curious to laugh at him. When he steps forward towards success, his hardships never meant for them. How he did that or he did that in some other illegal way are the thoughts for others. The place he achieved with those struggles and sufferings are never known and hidden to the eyes of others.

After sometime, his ears listened to the sound of the arrival of the train. He is in conscious for now. He prepared and took his bag when the train reaches the platform. He went inside and placed in his seat. He got window seat. the compartment also looks deserted like the station. A man is lying in upper birth. A girl is sitting lonely in the combined seat and some of them are sitting beside him. The train departed the platform. He admired through the window. Side by side, he kept an eye on the girl too. Kannan saw the girl sad and he don’t know why she is. While the train moves some distance far, he felt hungry. His hands are empty. No food. Without knowing what to do, he just watched through the window.

Generally, kannan doesn’t care about anyone because he knows about this society. This society is made of millionaire people; they keep rules and regulations; they change those rules according to their favor to show off, they do anything they don’t care about any and don’t know the situations of anyone. Kannan doesn’t panic on seeing this society but he panicked on thinking about his life.

Later, kannan take a book from his bag. It is a novel called ponniyin selvan written by amarar kalki. He started to read. While going line by line, he merged in it. Author’s words made him to merge in it. The train arrived dindugal junction. His hunger disturbed him again. He get down from the train and went to a hotel quickly.

“ bro, make a parcel of 4 idlies ( rice cake )”

He asked, get it and went to his seat soon. He doesn’t care about anyone and even the girl sitting nearby, he started to open the parcel in a hurry and just swallowed. Those idlies and sambar( side dish ) distracted him from the world. Idly is his favorite food but it is not the reason for hurry. His hunger erodes his intestine. Both train horns and he had his idlies simultaneously. He throw the parcel cover through the window, washed his hands and sitting on the seat with a deep breath.

Shortly after the train left, kannan starred at her sad face again. She looks more confused than him. He scratched his head whether he can talk to her or should not. Finally, he tried to talk to her. His heart beats fastly, his hands shivered as he doesn’t talk to stranger, also it’s a girl and willingly he didn’t speak to anyone like this. But he doesn’t show his feelings outside in his face. However, bravely,

“ Tamil person?”

He questioned and she lifted her head and said yes.

“why are you sad? Is there any problem? You seems to be very dull and suffering inside alone. Just thought to ask you.” He asked.

With hesitancy,

“ when I boarded the train from pollachi, four guys boarded along with me. No one was there in this compartment except us. They were nice to talk for sometime. But suddenly, one of them asked me to share my mobile number. I don’t know what to do. So I kept silent. Then I didn’t talk to him.” She said. He asked who is he. She pointed out the upper birth guy. He is the guy who is just above kannan lying in upper birth. Kannan told, “ don’t worry. I wont ask you mobile number. So you can peak with me without any hesitation” and grinned. But her face never changes her sorrow. Then he don’t know what to talk and kept silence for a while.

After sometime, kannan wants to talk to her and so he said his name that he is kannan. The girl told that she already knows; heard while TTR mentioned.

“ what’s your name?’

She hesitated a little.

“ its ok. If you are not willing, as it be.”

“ its not like that. Im abi.”

“ is this your real name? or else you just faked to me?”

“ do you wanna show me my ID card?” she questioned immediately.

“no no. don’t take it serious. Just kidding you.”he said. “ if you don’t mind, we can talk each other “ he said and she just shaked her head a little. This scene is just looking like a cinema frame for kannan. Hero and heroine get introduced, their conversation and getting friendly. But he don’t know how to speak with her. So she started,” what are you doing?”.

“im running my own business in Chennai. This is my native. I came here for some work and again returning to Chennai. What about you?”

“ im in chengalpat. But my native is different place, I have studied in different place and now, living in different place.”

“ then you might have known many places.” Kannan said.

“ its not like that. I know only few places. I have studied in Chennai. Im not with my parents mostly.i have two siblings, one younger brother and younger sister.”

After knowing about her, he shared some information about him too. Generally, kannan don’t share his personal information to any strangers. He don’t believe too. So he introduced himself not exactly to her.

Later, kannan got attached to her slowly, only in their conversation. Both of them forget their sorrow and become friendly.

Kannan likes abi much because of her innocent talks. The girl who hesitated to talk first is talking without any pause to him.

Its might be around 10.30. the train arrived trichy junction. Then the compartment gets overloaded. He thought that abi will leave because of the crowd and he worried. But she didn’t. instead she extended their conversation asking about him more. This makes him more happy. Kannan never talked to a stranger before like this. But, Both of them are talking for a longtime.

“ there’s nothing to say about me. I love movies. I want to become a director. I hope for sure that itll happen one day.”

“don’t forget me after becoming a director.”

“I don’t know why everyone tells this. Ill always be like how I’m now.”

“don’t worry. Everything will be fine. God will bless you whatever you need.”

“god? I don’t believe in such stuffs.”

What he hopes doesn’t come in real for kannan. So he don’t believe in god. Many have different perspectives. But kannan has a perspective on god much different from others.

“why don’t you believe, there will be some reason behind it.”

“what is god? Is Making communities between people, a god? nothing is fair here. The one who suffers always suffers and one who betrays is fine always. Then where is god now?”

“do you like periyar?”

“why are you asking , since I’m talking like an atheist?”

“not like that, but if one likes periyar, they don’t believe in god, that’s why I asked.”

“ yes, I like periyar.” kannan said and laughed.

“god is just an inner belief, that’s all, there’s nothing more than that.”

“yes, it’s a belief. I agree. I have a belief too. Those rock made sculptures in the temple is not a god. There’s some power more than this human race. I wont say there is not but its not a god. If I’m in trouble and some one comes to help me, then they are my god.”

“that’s what I’m saying. God wont come in real. He will send help through another human.”

Kannan laughed and said “ listen me, love is god. Nothing else. Its not a game to send a substitute for another one.”

“it seems abi wont give up and she said” having a god name as lord kannan and arguing with me.”

“ this name is kept for me when I’m not an intellectual one as I was an infant.”

“ why do you hate god?”

“I don’t hate but as u said I like periyar and many incidents happened which is the reason. Lets don’t talk about this topic further.” He said.

They didn’t care anyone around them and just argued. Train got stopped suddenly. Kannan saw through the window and it stopped for the signal. He saw abi and laughed.

“I asked you not to talk about only god.” He said.

“Do you love someone?” she asked.

“again with some other problem you have started “ he laughed.

This is also a part of Tamil cinema. yes, hero and heroine will be talking for sometime and will ask this question because the next scene will be their love.

“why are you asking?”

“nothing, just though to ask. This is a general topic, right.”

Kannan laughed at abi.

“why are you laughing at me?”

“ I had a love, four years ago. Not for now. I don’t want to talk about it.”

“ I asked you just like that and you don’t wanna talk about it.”

“are you single?”

“yes, how did you guessed?”

“ I know astrology so and so I have found out.”

“ whether I have to laugh for this?” she starred.

“we are nearly 4 hours in this compartment. Still you didn’t receive any messages or call. That’s how I guessed.”

“huh, there is no signal. So there is no messages or calls. And so I couldn’t reply any. Your thinking is simply silly, mr.kannan.”

He starred at abi and she make a false grin at him.

“ Committed?”

Abi laughed loudly and said “ I’m just kidding you. I’m single.”

“when I saw you at first, you were sad and silent, but now you are kidding me.”

“ im not interested in relationships. Don’t ask me why. I don’t know. It looks like one betrays another and looks something dramatic.”

“oh, are you the one who thinks that all men are same.”

“no no I’m not the one. Still I didn’t find the one. That’s it.”

Again there was a silence between them. Kannan checked his mobile and the time is 11.30. he asked “ don’t you feel hungry, still you didn’t have anything?”

“I don’t feel hungry now. Mostly I wont have anything while traveling. But also I have chapathis and I wont eat without getting hungry.”

“I felt so hungry. You have seen right. I didn’t care about anything and had my food.” Kannan humored and abi laughed.

“where are you in chengalpat?”

“ im living in a hotel. Its near my workplace. There will be always crowded with boys at day and night.”

“there will be boys if there is a ladies hostel.”

“ I have a doubt. Shall I ask you?”

“certainly, please.”

“what do you think about sex?”

Kannan mind interrogates himself. Why she asked about this, will it be like that or will be for this…….he didn’t show anything in his face and relaxed himself for a while and saw her.

Sex is a general topic for this generation. kannan knows about it. But when a stranger girl, within few hours of conversation, if she asked about sex, there will be some confusion and hesitation for any.

“ don’t mistaken me. There is a colleague named karthick. We are friends. But he spends a lot of time with me.”

“ ok. What’s the relation between this and what have you asked before?”

“ he’ll share everything happened in his life including about his love and sex with his lover.”

“ I don’t get you. Can you please elaborate.”

“I have two questions. One is why he shares about it and the other is why he shares about this only to me.”

“why do you buildup this question like a mystery. Its simple. First he might trust you a lot otherwise, he loves you. You can ask him because a guy who loves wants you to know about him everything.”

“is it? But I don’t think so.”

“as far as I know, boys want to show off that they are so called guy to girls. So, he may said this to you and they will tell you that they know and they did without knowing a stuff and without doing. That’s boys’ nature. Likewise he may told that to you without doing anything.”

“yeah. Maybe .” she said without a satisfaction and asked “ are you a virgin?”

“if I asked you, it’ll be something awkward, right?”

“is there any boy dare to ask this to a girl?”

“ I dare to ask but I don’t wanna ask this.”

Abi starred him and yawned.

“do you feel drowsy?”

“ yeah, a little. But it wont be nice making you not to sleep by talking and then if I sleep, so will talk for sometime. What do you like then?”

“I like photography.”

“wow. My brother clicks photos well?”

“although not to the extend of your brother, ill also take pictures somewhat good.” He laughed. He took his mobile and showed her those pictures he shoots. Her eyes got drowned while seeing those pictures. He felt that and said, “it seems you couldn’t control yourself, please sleep”. She said ok and went to sleep but really kannan feels drowsy but he didn’t express it.

Exactly the time is 12.35. whatever he feel sleepy, he wants to talk to her for some more time. This is his first experience. She went to upper birth and slept. He starred her until she reached her cot and he slept too. As soon as they lay on their cot, they both slept forgetting their sorrow and everything. As everyone says, both sleep and sadness will pass by depending on our perspective.

Their night were like dreams and just flows to Chennai in that train.

Its morning 6.15 and the train arrives Chennai central station. She woke up early before kannan and got ready with her bag to get down from the train. She wake him and asked him to sleep in his home. He laughed and greeted good morning to her. The train stops and she got down. Kanna took his bad quickly , get down and saw her going. She didn’t even turn around and see him back once. He got ready to go home.

Kannan thought to ask her to share her mobile number. But if he asked, she may think that the guy first she saw and him will be same. So and so he didn’t ask her number.

However, kannan felt sad, he felt happy one side for making her feel secure for 6 hours travel journey and he knows that very well.

Everything is simple here but it depends on how we see that.

That meeting between them becomes an unforgettable meeting for kannan.

But he doesn’t know how abi takes it.



By Krishna MG





Recent Posts

See All
Unread

By Roshan Tara “You’ve never written me a love letter,” she teased, eyes bright. “Like in old movies. Handwritten. Just once—for my birthday.” He promised. But fate was faster than his pen. She never

 
 
 
Teaming Up and Escaping From Kidnap

By Hemasri Nithya Chodagiri “I don’t know how I got myself here”. “I'm an ordinary orphan and my name is Henry”. “My dad raised me until I was 10 but after that my dad died in a museum fire and my mom

 
 
 
The First Sight

By Gaayathri Arasakumar “ Senapathi , move forward, come what may! Let no Deva  or man stop us!” I bellowed over the chaos of the battlefield. Perhaps, Mallan had not heard my cry over the maddening t

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page