நீ இருந்திருந்தால்
By Jeyanthi R
பள்ளி பருவத்தில் களிப்போடிருந்திருப்பேன்
கவலைப்படாமல்,
பேருந்தில் பயணித்திருந்திருப்பேன்
ஆனந்தக்கண்ணீராய்
அழுகைக்கண்ணீரீய் இல்லாமல்,
தனிமையை தள்ளி வைத்திருந்திருப்பேன்
நான் தனித்திராமல்,
தோழிகள் யாரென அனுபவத்தில் அறிந்திருப்பேன்
பிறர் கூற்றை கேளாமல்,
அனுதின நிகழ்வுகளை அலங்கரித்து கூறியிருப்பேன்
பெற்றோருடன் கூறும் முன் உன்னிடம் ஒரு முறை,
இந்த நாள் வரை எங்கேப் போனாயோ,
இன்று எங்கிருந்து வந்தாயோ,
தோழிகளுக்காய் ஏங்கி நான் விட்ட கண்ணீரில் முளைத்த மரமோ? நீ
பூத்துக் குலுங்கி புது மணம் வீசுகின்றாயே!
பூவாகிய உன்னோடு சேர்ந்து நாராகிய நீனும் மனக்க வரந்தாராயே,
இனியும் கண்ணீர் தொடரும்;
அழுகைக்கண்ணீராக அல்ல ஆனந்த கண்ணீராக
நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பது சுலபம்.
உயிரைக் கொடுக்குமளவுக்கு நண்பர்கள்
கிடைப்பது தான கடினம் என்பார்கள்
அக்கடினத்தை எளிதாக்கும் தோழியே,
என் கோபத்திற்க்கு ஆளாகும் சகோதரியே,
அழுகுரலுக்கு ஆறுதளழிக்கும் தாயே,
தன் தேவையைத் தள்ளி வைத்து
என் தேவையை பூர்த்தி செய்யும்தந்தையே,
அழுகுரலுக்கு செவிமடுத்து ஆனந்தக் கட்டளையிட்டு
இன்ப துன்பத்தில்
ஈடு இனையின்றி
பங்கெடுக்கும்
இத்தங்கத்தாரகையை
என் மரணத்திலும் பிரியா வரம் தாரும் பராபரமே!!
By Jeyanthi R

Comments