தனிமை (THANIMAI)
By Kanagasabai Chandrasekaran
கூட்டிக்கொண்டே சென்ற
நினைவுகளை…
கூட்டி,
கழித்து,
பெருக்கி,
வகுத்து,
தணிக்கைச் செய்வதும்.,
நினைவுகளின் வரிசையில்
கூட்டு சேர்ந்து
இடம்பிடித்துக்கொள்கிறது.!
தனிமையின்
கோரப்பிடியில்
கொஞ்சம் வலிகள்
தளர்த்தப்படுவதும்
சுகமே..!
By Kanagasabai Chandrasekaran

Comments