தொலைந்த என் இதயம்
- Hashtag Kalakar
- May 6, 2023
- 1 min read
By M.I TamimulAnsary
"புலியை மான் துரத்துவது போன்று, என்னையும்,என் மனதையும் உன் காதலைக் கொண்டு விரட்டினாய். சில சமயம் வியந்தேன்! சில சமயம் பயந்தேன்! ஏன் ! இது உறக்கத்தில் வரும் நித்திரை இதிலிருந்து நான் விழித்துக் கொள்ள வேண்டும் என பலமுறை முயற்சி செய்திருக்கிறேன் இருந்தும் என்ன பயன்? அன்னையின் மார்பினில் சுரக்கும் தூய்மைக்கு இலக்கணமான தாய்ப்பாலை போன்று இடுஇணையில்லா உன் அன்புக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன். பற்றி ஏறியும் அக்னி தாங்கிக்கொள்ள முடியாத உஷ்ணத்தை உமிழ்வது போல் கோபத்தில் தாங்க முடியாத கடுஞ்ச்சொற்களை பேசி என் நாவாலும் , இழிவான செயலாலும் என்னையும்,நம் காதலையும் சுமக்கும் உன் உள்ளத்தை பலமுறை காய்ப்படுத்தி உள்ளேன்.ஆனால் அவற்றை எல்லாம் மறந்து என்னதான் நான் உன்னிடம் கடுமையாய் நடந்தாலும் உன் காதல் என்னும் மழையை என்மேல் பொழிய ஒருபோதும் தவறியதில்லை.கையில் புதையலே கிட்டினாலும் அது உண்மையா அல்லது போலியா? என்று சோதித்துப்பார்க்கும் ஒரு சராசரி மனிதன் போலவே எவ்வித
எதிர்பார்ப்புமின்றி எனக்கு கிடைத்த அல்ல அல்ல குறையாத உன் காதல்சுரபியை பலமுறை சோதனை என்ற பெயரில் வேதனையை உனக்கு அளித்துள்ளேன்.இயற்கையை தன் தேவைக்காக அழித்து அதன் மூலம் செல்வம் பெற்று தனக்கு எல்லாம் அளித்த அந்த இயற்கையை நினைப்பது கூட இல்லாமால் மீண்டும் எப்படி பயன்படுத்தி லாபம் பார்க்கலாம் என்ற நினைக்கும் சுயநலமுல்ல மானிடக்கூடத்தில் ஒருவனாய் நான் உள்ளேன் என்பதை எண்ணி எண்ணி மனம் வருந்துகிறேன்.ஆனால், நீயோ! தன்னை அழித்தவனுக்கு சிறு தீங்கு நினைக்காமால் மேலும் அவனுக்கு நன்மை செய்யும் இயற்கை அரசியை திகழ்கிறாய்! மனிதன் இயற்கையின் செல்வத்தை ஆண்டு, பின்பு அதை அழித்தான்! நான் உன் அளவில்லா அன்பில் உள்ளாசமாக குளிர்காய்ந்த பின்னர் உன்னனயே தூக்கி ஏறிந்தேன். இப்போது உன்னைத்தேடி ஒரு யாசகன் போன்று திருகிறேன் உன் அன்பு என்னும் பிச்சை மீண்டும் கிடைக்காதா என்று! உன் காதலை அலட்சியப்படுத்தியதால் இன்று நான் அவலட்சணமாய் தோன்றுகிறேன். கண்கட்டிய பின்பு சூரிய வணக்கம் எதற்கு? என்ற பழமொழிக்கு ஏற்ப என் அருகில் இருந்த உன்னை துரத்தி விட்டு இப்பொழுது தேடி அலைகிறேன் தேடிக்கொண்டே இருப்பேன் என் மூச்சு நின்றாலும் என் நினைவு உன்னை தேடியேத்திரியும்.உன் மலரடி பாதங்களில் மண்டியிட்டு என் தவறை உணர்ந்து இந்த துரத்திர்ஷ்டசாலியை மன்னிப்பாயா என்று உன்னிடம் சரணடையவே காத்திருக்கிறேன். அன்பே எந்த மலரின் மொட்டுகளில் நீ மறைந்திருந்தாலும் உன்னை கண்டுப்பிடிப்பதோடு, கரமும் பிடிப்பேன்! இப்படிக்கு தன் மூகவரியான உன்னைத்தொலைத்து விட்டுத்தேடும் உன் காதல் அகதி....! "
By M.I TamimulAnsary

Comments