கதிரவனுக்கும் காதல் உண்டு
- Hashtag Kalakar
- May 11, 2023
- 1 min read
By M.I TamimulAnsary
"தன் செங்கதிரால் யாவரையும் கதிகலங்கவைத்து, தன்னை ஏறெடுத்துப் பார்ப்போரை நிலைகுலைய வைத்து, தன்னை தொட்டவன் கெட்டான் என்று கர்வத்தோடு பூமியை உலா வரும் கதிரவனையே காதல் வயப்பட வைத்தவள் தான் கார்மேக குழலி!தன்னை நெருங்கவே முடியாத அக்னி அரசனையே! அசரவைத்தவள் இந்த மேக மோகினி! பூவுலகை உஷ்ணத்தில் ஆழ்த்திய ஆதவனை இந்த மாயாவி மேகம் எனும் மோகத்தில் ஆழ்த்தியது! தன் ஒளியால் வானையும்,மண்ணையும் ஆட்சி புரிந்தவனை கருங்கூந்தலுக்குள் உள்ளடக்கி மாரியை தோன்றி தன் காதலை உலகிற்கே தெரியப்படுத்திருக்கிறாள்!
இறுதியில் சுட்டெரிக்கும் கதிரவனுக்கும் காதல் வந்தால் அவனும் கண்ணீர் சிந்துவான் என்பதே காதலின் நியதி....!"
- மு.தமிம்
By M.I TamimulAnsary

Comments