கண்ணீரின் சிரிப்பு - By Rusjanthi Piratheepan
Written By: Rusjanthi Piratheepan
Category: Poetry
Competition: Global Poetry and Creative Writing Competition 2026
In a compelling entry for the Global Poetry and Creative Writing Competition 2026, Rusjanthi Piratheepan unveils "கண்ணீரின் சிரிப்பு," a poignant exploration of human emotions. As a participant in the Poetry category, Rusjanthi's work delves into the intricate dance between tears and smiles, capturing the essence of resilience and the human spirit. This competition seeks to celebrate diverse voices and literary talents across the globe, and Rusjanthi's contribution adds a unique perspective to this rich tapestry.
About the Work
"கண்ணீரின் சிரிப்பு" is a profound meditation on the interplay between visible emotions and the unspoken depths of the heart. Rusjanthi Piratheepan masterfully employs vivid imagery and emotive language to depict how smiles often mask tears, revealing a layered narrative of pain and joy. The poem's reflective tone invites readers to consider the duality of human expression and the subtle strength found in vulnerability.
கண்ணீரின் சிரிப்பு
Original Submission by Rusjanthi Piratheepan
கண்ணீரின் சிரிப்பு
மனம் கொண்ட மானிடர் நாம்
அம்மனதில் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த
வார்த்தைகளை தாண்டி பல உணர்வலைகளை யுத்திகளாக கொண்டுள்ளோம்.
மனம் பக்குவப்பட்டு போகின்ற போதும்
நிதர்சனங்கள் இவை தான் என ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போதும்
கண்களின் கண்ணீர்
உதடுகளில் சிரிப்பாக உருவகிக்கப்படுகிறது.
‘எனக்கு ஒன்றுமில்லை நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்’ எனச் சொல்லும் ஆயிரம் பொய்களுக்கு
கண்களில் தேங்கி ததும்பும் கண்ணீரை மறைத்து
வலியை வென்று பிறந்த
உதட்டுச்சிரிப்பு ஒற்றைச் சாட்சி.
உதடுகளுக்கு மட்டுமா சிரிக்க தெரியும் - இல்லை
கண்ணீருக்கு கூட சிரிக்க தெரியும்
இது உனக்கு பிடிக்கும்னு தான் சமைத்தேன்- அம்மா
இது உனக்கு பிடிக்கும் என்று தான் வாங்கிட்டு வந்தேன்- அப்பா
இதை வாங்கி தா என்று அடம்பிடித்தாய் தானே அன்று வா இன்று வாங்க போவோம்- அண்ணா
இதை பார்த்ததும் உன் ஞாபகம் தான் வந்தது அது தான் வாங்கி அனுப்பினேன்- அக்கா
இந்த வழியாக போனேன் அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன்- தோழன்
எனக்கு தெரியும் நீ ஒரு நாள் வெற்றி பெறுவாய் என்று- பிம்பக்கண்ணாடி
இப்படி பல பிரியமானவர்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும்
முந்திக் கொள்கிறது ‘ஆனந்த கண்ணீர் ’.
கண்ணீர் வரும் போதெல்லாம்
அழ மறுக்கும் கண்களுக்கு
அழகாக கற்றுக்கொடுக்கப்படுகிறது
சிரிப்பு எனும் பாடம்.
மற்றவர்களின் பார்வைகளில் இருந்து வலிகளை
மறைக்கவும் மறுக்கவும்
உதடுகளால் வரையப்படும் ஓவியம் சிரிப்பு.
இதயம் அளவிட முடியாத அளவு
அன்பை ஆர்ப்பரித்து நிற்கும் போது அழகாகவும்
அதே இதயம் வலிகளால் நொருங்கிப் போகும் போது ஆழமாகவும்
இவ்விரண்டையும் இதயம் பேசும் மொழி
‘கண்ணீரின் சிரிப்பு ’.
About the Competition
The Global Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious platform dedicated to showcasing literary excellence from around the world. It offers writers and poets the opportunity to present their work to a global audience, celebrating creativity and diversity in written expression. The competition aims to foster a vibrant community of storytellers, encouraging them to share their unique voices and narratives.
We extend our heartfelt thanks to Rusjanthi Piratheepan for sharing the evocative poem "கண்ணீரின் சிரிப்பு" with us. Your participation in the Global Poetry and Creative Writing Competition 2026 enriches the literary landscape with its depth and emotional insight. We look forward to seeing more of your inspiring work in the future.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

Comments