கடலின் காதல்
Updated: Jul 28, 2025
By Ricky Alan Raj PS
கடலின் ஆசையோ கரையில் இணைவது !
மணலின் அச்சமோ ! அலைகளில் கரைவது!
விருப்பமின்றி கடலும் மணலை இழுத்துச் செல்ல !
கரையும் கரைந்தது மணலின்றி மெல்ல !மெல்ல!
ஒருதலை காதலால் கரையும் இறந்தது!
தன் தவறால் நிகழ்ந்தது என்று கடலும் அழுதது!
அதன் அழுகையே கடல் நீர் முழுதும் உப்பானதே!
அதன் கதறலே நம் காதுகளுக்கு ஒலியானதே!
By Ricky Alan Raj PS

Comments