குளப் பரணி - By Dr Padma Sridhar
- Hashtag Kalakar
- 1 hour ago
- 2 min read
Written By: Dr Padma Sridhar
Category: Classical Tamil Poetry
Competition: Poetry and Creative Writing Competition 2026
Experience the evocative world of classical Tamil poetry as woven by Dr Padma Sridhar in her submission titled "குளப் பரணி." Presented in the prestigious Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar, this work showcases the profound themes and rich imagery inherent in traditional Tamil literature. Dr Sridhar's adept use of the Tamil language and cultural nuances offers readers an insightful journey into the poetic landscape.
About the Work
"குளப் பரணி" is steeped in classical aesthetics, evoking the imagery of a battlefield through the lens of a dried-up pond. The poem masterfully intertwines nature with themes of loss and desolation, drawing parallels between the barren landscape and a war-torn field. The vivid imagery and reflective tone invite readers to contemplate the deeper implications of decay and transformation in nature.
குளப் பரணி
Original Submission by Dr Padma Sridhar
குளப் பரணி
(நீர்வற்றிய குளத்தில் இருந்த இறந்த மீன்களையும், செடிகொடிகளையும், களையிழந்து கரையில் நிற்கும் நெடுமரங்களையும் கண்ணுற்ற கவிஞருக்கு அவ்விடம் போர்க்களமாகத் தோன்றுகிறது. எனவே அவ்விடத்தைக் களமாக உருவகித்துப் பரணி பாடத்தொடங்குவது போல் இக்கவிதை புனையப்பட்டுள்ளது)
கலிவிருத்தம்
கடிபகை வேந்தன் களத்தே மகிழ்ந்திருந்தான்
முடியுடை மன்னன் மாண்டு மடிந்ததனால்
வடிநவில் நவியம் வதைத்துத் துயர்விளைக்க
கடிமரம் விழுந்தே கதறித் துடித்ததங்கே.
விடுவெனை யென்றே விடுத்த பேரொலியோ
கடுவனம் பரவிக் கடுகி விரிந்ததுவே
விடுகதிர் விடுப்போன் விரைந்து வந்ததுமே
படுமுடி ஒளிர்ந்து பரவித் தகித்ததுவே.
ஊழ்த்தசை நிறைந்த ஊழ்த்த அவ்வனத்தே
பாழ்த்த குடராம் பாவி யாமெனவே
தாழ்புயல் அனையத் தாழ்குழ லாளரற்றி
மூழ்கியே குழறி மாழ்கிப் புலம்பினளே.
கூர்மகள் உலவும் களமப் போர்க்களமாம்
ஊர்முகம் அடைந்த உற்றார் துடித்திடவே
சார்ந்தார் கலங்கிச் சோரச் சேர்ந்தாளின்
தார்விழத் தழுவும் தானை கிடந்தததுவாம்.
அவிழும் கால அழகினைப் பதித்திட
செவியை அடைத்துச் சிந்தனை கூட்டியே
கவிதை புனைய களத்தைத் தேடியேயான்
கவின்மிகு இடமென குளக்கரை அமர்ந்தேன்
சீர்கேடு உற்றிடச் சேறும் சகதியுமாய்
ஊர்ப்புறக் குளமோ ஓய்ந்து கிடந்ததனால்
போர்க்களம் பாடிடு பொருநன் போலேயான்
பார்க்காத களத்திற்குப் பாடினேன் குளப்பரணி.
* முனைவர் பத்மா ஸ்ரீ்தர்
(புனைபெயர் - நாங்குநேரி வாசஸ்ரீ்)
About the Competition
The Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a celebration of literary artistry, inviting participants from diverse backgrounds to showcase their creative talents. The competition serves as a platform for writers to express their unique voices and share their works with a global audience, fostering a vibrant community of literary enthusiasts.
We extend our heartfelt thanks to Dr Padma Sridhar for her contribution to the competition with "குளப் பரணி." Her classical Tamil poetry enriches the tapestry of our event, and we are grateful for her participation in the Poetry and Creative Writing Competition 2026.
About Hashtag Kalakar
Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.


Comments