காலை கனா !
Updated: Sep 21, 2022
By Yasmine Ayesha
மெல்லிய சாரலில்,
மெல்லிசை பாடலில்,
பொய் ஒன்றை கோரினேன்,
அதை மெய்யென மாற்றிடு.
நானோ, இல்லை நீரோ,
நேராய் இருத்தல் வீணோ,
என்னை மறத்தல் ஏனோ,
சிக்கும் தூண்டில் முள்ளில் மீனோ!
கவிதையும் தீர்ந்தது,
என் கனவும் ஏன் கலைந்தது?
காரணம் கண்டேன் கண்ணெதிரே,
எம் கற்பணையில் யாவும் கறைந்திடவே!
பொய்யில் கலந்த மெய் நடுவே,
கையுள் உன் கை கலந்திடவே,
வாயும் இன்றி நா அசைய,
வாய்ப்பும் கிட்டும் நான் பிறக்க!
வீற்றிருக்கும் நிலவழகும்,
தோற்று விட உன் கண் அசைவில்,
தேடலில் தொலைத்தும்,
தாகம் தணியா சுகம் காணேன்,
உன் கைச்சேர்த்து காலை விடிந்தால்!
1. Day Dizziness !
As it slight drizzles,
Through a melodious song,
I requested for a tall tale,
Reciprocate it to be true.
If we're like a water,
Being straight is futile,
Why you’re neglecting me?
Like a fish on a hook!
When my lines are over,
Why my dream disappeared?
The reason was visible in front,
As in my imagination, everything fades!
Amid the truth mixed with lies,
When our hands stick firmly,
Voice stumbles without a word,
I'll resuscitated if there is a chance!
Even the beauty of the full moon,
May fail to impress if your eye winks!
As lost in the process of searching,
Found an unrelenting pleasure,
If we together admired the morning dawns!
By Yasmine Ayesha

Comments