காமெடி கவிஞர் வடிவேலு
Updated: Jul 15, 2025
By Jagathisan Periyasamy
என்ன வச்சு காமெடியோ கீமெடியோ
எதையும் நாம பிளான் பண்ணி பண்ணனும்.
நாம எது பண்ணாலும் என்றுமே
நம்மள தான் உலகம் உத்து பாக்கணும்.
நாதாரி தனம் பண்ணிணாலுமே, அதை
நாசூக்கா பண்ண நமக்கு தெரியணும்.
நானும் கூட ரவுடி தான்யா நம்புய்யா,
எங்க ஏரியாக்கு வந்து மட்டும் பாருய்யா
நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன் மாப்ளே.
மாப்பு! இப்ப நமக்கு வெச்சுட்டாண்டா ஆப்பு!
தைரியமான ஆளாச்சே நீ சொல்லுயா.
அது வேற வவாய், இது நாற வாய்.
நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெயிலு !
அவங்க அடிச்சு கூட கேப்பாங்க நீ சொல்லாதே.
நல்லா தானே போய்க்கிட்டு இருந்தது.
இந்த நாக்கு ஏனோ இன்று ரொம்ப குழருது!
என்ன பாவம் யாருக்கு நான் செஞ்சேனோ?
ஏன் எனக்கு மட்டும் இப்படியே நடக்குது.
வேணாம் ,அடிக்காதே அழுதிடுவேன்.
பில்டிங் ஸ்ட்ராங்- பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்குயா.
எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேண்டா?
எவளவு அடிச்சும் தாங்குறாண்டா நல்லவன்!
கவுரவம் கவுரவம்னு செதைச்சிட்டான்.
உசுப்பேத்தி உடம்பை புண்ணா ஆக்கிட்டன்.
( இது பிரபல தமிழ் காமெடி நடிகர் வடிவேலு அவர்களின் மிக பிரபலமான, திரையில் வந்த வசனங்கள் கவிதை வடிவில்.சமூக வலைதளங்களில் இருந்து தொகுத்தது)
By Jagathisan Periyasamy

Comments