கொஞ்சட்டும் கோபம் (konjattum Kobam)
By Kanagasabai Chandrasekaran
அத்தனை உணர்வுகளுக்கும்
வேண்டிய இடமளிக்கும் போது மட்டுமே
அறுசுவை கலந்து, வாழ்வும் ருசிக்கும்.
பரிமாறப்படும்,
அன்பென்ற தித்திப்பு மட்டுமே
திகட்டிவிடும்.
கோபமென்ற கசப்பும்
வெறுத்து ஒதுக்கப்படும்
ஓர்நாள்.
உணர்வொன்றை மட்டுமே
அடையாளப்படுத்தினால்,
நம்மின்
அடுத்த உணர்வுகளுக்கான இடம்
இந்த பிரபஞ்சத்திலேயே…
ஓரணுவளவு கூட
இல்லாமல் போகலாம்..!!
அளாதியான அன்பிலும்
கொஞ்சம் கோபமும்
கொஞ்சட்டும்..!
By Kanagasabai Chandrasekaran

Comments