ஏமாற்றம் (YEMAATRAM)
By Kanagasabai Chandrasekaran
சூழ்ந்து வந்த
கனவுக்கருமேகக்கூட்டத்தை.,
பொருத்தமெனும்
பொருந்தா சூறைக்காற்று..
கலைந்ததுவிட்டது.
மழைபொய்த்துபோன
பொட்டல்காட்டில்...
கைகளையுயர்த்தி வேண்டின்
கண்ணீர் மட்டுமே பொங்கும்
வானம் பார்த்த பூமியில்
எதிர்பார்ப்பு.,
என்றுமே
ஏமாற்றமெனும்
செருப்பை கழட்ட
தயங்குவதேயில்லை..!!
By Kanagasabai Chandrasekaran

Comments