என்றும் இளமையான பொற்காலமே!
By Vidhiya Prashanna
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்
மற்றும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆண்
என்பது இயல்பான யதார்த்தம்!
சற்றே மாறாக
ஒவ்வொரு ஆசிரியரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஒவ்வொரு மாணவனுமே! ஆகையால் உன்னில் கற்றதின் பட்டியல் இதோ …….
உன் சிரிப்பில் கற்ற பாடம் - கவலை மற!
உன் குழந்தைத்தனம் கற்றுக்கொடுத்த பாடம் - என் முதுமை, என்றால்
உன் குறும்பில் வலிமைப் பெற்றதோ என் பொறுமை!
உன் வெற்றிகள் காட்டியப் பாதையே என் முயற்சிகள்
உன் தோல்விகள் சொல்லிய பாடமே என் விடாமுயற்சி!
உன் தோல்விகள, சொல்லிய பாடமே என் விடாமுயற்சி!
காலகெடுவிற்குள் பெற்ற உன் ஒப்படைப்பில், நான் கொண்டேன் பெருமிதம்
உன் தாமதமான ஒப்படைப்பே, மெருகேற்றியதே என் கூடுதல் கவனம்!!
கல்வித்துறையில் ஆரோக்கியமான போட்டி அவசியம்
வகுப்பறையில் உன் அபார ஆற்றலுடன் போட்டியிடுவதே எனக்கு ஸ்வாரஸ்யம் ( 2)
உன் மன அழுத்தம், வெறுப்பு மற்றும் கோபத்தை அணுகும் முறையில்( 2) நான் கற்கும் பாடம் ஏராளம்
ஆகையால் உன் ஒவ்வொரு தவறில் பிறந்தது தான், என் திருத்தம் என்பதே யதார்த்தம்!
நான் திருத்தும் வினாத்தாளில் உன் தவறுகளை கோடிட்டு, சிவப்பு வண்ணம் பூசி
அழகு பார்ப்பதில், எனக்கு எத்தனை பெருமை !
அதைக் கண்ட பிறகும் உன் புன்னகை எனும், சிவப்பு கம்பள வரவேற்பில்
நீயே உணர்த்தினாய் என் எண்ணங்களின் அத்தனை சிறுமை !
தேர்வில், கோடிட்ட இடங்களை நிரப்புகிறாய். வாழ்வில்
உன் பெற்றோருக்கு, வாழ்வின் ஆதாரமாய், என்னைபோல் ஆசிரியர்களுக்கு
“வாழ்வாதாரம் எனும் கோட்டை”, நீயே நிரப்புகிறாய் !
மூன்றில் ஒன்றை தேர்வு செய்வது உனக்கு எவ்வளவு எளிமை ?
இத்தனை சொத்துக்களுக்கு செல்வந்தரான உன்னில் ஒன்றை தேர்வு செய்து போற்றுவது எங்கள் எல்லோருக்கும் அத்தனை கடுமை !
இப்படி உன் சிரிப்பு, ஆற்றல், புதுமையான சிந்தனை, பெருந்தன்மை, வெற்றி மற்றும் தோல்வியிலும் ( 2) பிறந்த ஒவ்வொரு ஆசிரியரின் சார்பாக
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
மாணவர்களின் குழந்தைத்தனத்தோடு பயணிக்கும் அனைத்து
ஆசிரியர்களுக்கும் என்றும் இளமையான பொற்காலமே!
By Vidhiya Prashanna

Beautifully written about how every teacher thrives. Thoughtful and insightful
It is just amazing and deeply touching. It has become one of my most favourite writings.
மிக அருமையான கவிதை, உணர்வுகளைத் தூண்டும், ஆழமான வரிகளைக் கொண்ட, மனதை ஈர்க்கும் கவிதை.
Heartfelt and deeply moving