என் பயணம்
By Jeyanthi R
நான் ஒரு பாதையில் பயணிக்கிறேன்
அப்பாதையோ
ஒரு வழியா, இரு வழியா எனத்தெரியாமல்
தற்காலிகமா, நிரந்தரமா எனத் தெரியாமல்
நிழலா, நிஜமா எனத் தெரியாமல்
வருவது வழிகாட்டியா, வாழ்க்கையா எனத் தெரியாமல்
தொடக்கமா, முடிவா எனத் தெரியாமல்
ஒன்று மட்டும் உணர முடிகிறது
எனக்குள் நீ இருப்பது போல்
உனக்குள் நான் இருக்கிறேன் என்று.
அன்பே
பிறகு ஏன் மௌனமாய் பயணிக்கின்றாய்
உன் மௌனம் சுட்டிக்காட்டுவது எதை
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பதையா
இல்லை
உன்னைக்குறித்த என் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளியா !
மனத்திற்கு பிடித்தவர்களின் மௌனம்
எரிமலைக் குழம்பின் அனலை விடக் கொடூரம்
உன் மனக் கதவை சாவிக் கொண்டு திறந்து விடு
நான் தான் உன் சாவியெனில் விரைவில் சொல்லிவிடு
By Jeyanthi R

Comments