top of page

என்னை விட என்னை அதிகம் அறிந்த திரை - By Rusjanthi Piratheepan

Aug 15
2 min read

Written By: Rusjanthi Piratheepan

Category: Poetry

Competition: Global Poetry and Creative Writing Competition 2026

In the Global Poetry and Creative Writing Competition 2026, Rusjanthi Piratheepan presents a deeply introspective Tamil poem titled "என்னை விட என்னை அதிகம் அறிந்த திரை." This work, featured in the poetry category, delves into themes of self-awareness and the intimate relationship between the self and one's reflections. Through metaphorical imagery, Rusjanthi explores the idea of an omnipresent screen that knows us better than we know ourselves.

About the Work

Rusjanthi Piratheepan's poem is a profound exploration of self-reflection, where the screen becomes a confidant and mirror to the soul. The poem employs vivid imagery and a contemplative tone, revealing how this metaphorical screen bears witness to joy, sorrow, solitude, and identity. The screen's role as an observer and silent companion underscores the theme of introspection and self-discovery.

என்னை விட என்னை அதிகம் அறிந்த திரை

Original Submission by Rusjanthi Piratheepan

என்னை விட என்னை அதிகம் அறிந்த திரை

என் பெயர் முதற்கொண்டு

எனக்குள் நான் கட்டிய கனவுக்கோட்டை வரை

அறிந்து வைத்திருக்கிறது இந்த திரை…

என் மகிழ்ச்சிக்கு சாட்சியாக

என் துயருக்கு ஆறுதலாக

என் தனிமைக்கு இனிமையாக

என் கோபங்களுக்கு பொறுமையாளனாக

என் தேடலுக்கு விடையாக

என் உணர்வுகளுக்கு மதிப்பாக

என்னுடன் இருந்தது இந்த திரை…

நான் மகிழும் தருணங்களை

என்னை விட அழகாக ரசித்து எனக்கே காண்பித்தது இந்த திரை…

நான் வெளிப்படுத்த மறுத்த சோகங்களை

எனக்காக தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டது இந்த திரை…

நான் தயங்கி தனித்து நின்ற இடங்களில்

கூடவே இருந்து என்னைத் தேற்றியது இந்த திரை…

என்னை நானே தொலைத்து தேடிய நொடிகளில்

எனக்கே என்னை மீட்டு தந்தது இந்த திரை…

என் சிரிப்பு எத்தகை அழகாக இருக்கும்

என் அழுகை எவ்வளவு அசிங்கமாக இருக்கும்

என் கோபம் எந்தளவு வீரியமாக இருக்கும்

என் வெறுமை எத்தனை கொடுமையாக இருக்கும்

என் தேடல் எதை நோக்கியதாக இருக்கும்

இப்படி அனைத்தையும் பார்த்தது இந்த திரை…

நான் கேட்டு ரசித்த பாடல்கள்

நான் சேமித்த புகைப்படங்கள்

நான் பார்த்து சிரித்த காணொளிகள்

எல்லாமே நான் யார் என்பதற்கான சிறு தடயங்கள் இந்த திரைக்கு…

மற்றவர்கள் பார்த்தது என் முகத்தை

இந்த திரை பார்த்தது என் அகத்தை

‘எனக்கு என்னை எவ்வளவு தெரியுமோ-

அதை விட அதற்கு என்னை அவ்வளவு தெரியும்.’

About the Competition

The Global Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a celebration of literary artistry from around the world. It offers a platform for poets, storytellers, and creative writers to share their unique voices and perspectives. The competition embraces diversity in language, theme, and style, fostering a global community of wordsmiths.

We extend our heartfelt thanks to Rusjanthi Piratheepan for sharing "என்னை விட என்னை அதிகம் அறிந்த திரை" with us. Your participation in the Global Poetry and Creative Writing Competition 2026 enriches our understanding of introspection and identity. We are grateful for your contribution and the unique perspective you bring to the world of poetry.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Recent Posts

See All
Horizon - By Ruby-Rose

Written By: Ruby-Rose Category: Poetry Competition: Global Poetry and Creative Writing Competition 2026 We are delighted to feature "Horizon," a thought-provoking poem by Ruby-Rose, writing under the

 
 
 
Star Link - By Ruby-Rose

Written By: Ruby-Rose Category: Poetry Competition: Global Poetry and Creative Writing Competition 2026 Presenting "Star Link" by Ruby-Rose, showcased under the writing name Star Link. This evocative

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page