ஆண்கள்
By Krishna MG
ஆண்களைப் பற்றிய கவிதை ஒன்றோ, இரண்டோ இருக்கலாம். அல்லது பத்தோ,பன்னிரண்டு இருக்கலாம் அதில் பதிமூன்றாவதாக இந்த கவிதை. அனைத்து ஆண்களுக்கும் கிடையாது... இயற்கையின் தவிர்க்க முடியாத கவிதை ஆண்... தேடல் நிறைந்தவன் ஆண்... கூட்டத்தில் அழத் தெரியாதவன் ஆண்... சில சமயம் அரக்கனாக ஆண் சில சமயம் அன்னை தெரேசாவாக அவன்! வியக்கிறேன்... தனக்கென வாழாதவன் ஆண்... சில அம்மாக்களின் பெண் பிள்ளை ஆண்... பெண்களைக் கொண்டாடும் அளவுக்கு ஆண்களைக் கொண்டாடுவதில்லை... அவன் கொள்ளும் வெட்கம் 8வது அதிசயம் அதைக் காண்பதும் சொற்பமே... கோவம் அவனுக்கே உரித்தான ஒன்று அது குழந்தையின் கோபத்திற்கு ஈடானது... அவன் கண்ணீர் யாரும் கண்டிடா ஒன்று... ஆண்களும் தேவதைகளே பெற்றோருக்குப் பிள்ளையாக... சகோதரிக்கு அண்ணா,தம்பியாகக் காதலிக்குக் கணவனாக... மனைவிக்குத் தோழனாக... பிள்ளைகளுக்கு அப்பாவாக ஆண்களும் தேவதைகளே ஆண் வர்க்கத்தின் பெயர்கள் ஊதாரி சோம்பேறி பொறுக்கி தண்டச்சோறு ஆனாலும் இவற்றை தன் பட்டங்களாகப் பாவிப்பது தான் ஆண்கள்... பெண்மையின் குணம் அவனுக்கும் உண்டு... அவனை நானம் கொள்ளச்செய்ய எத்திரிலிருந்து ஒரு புன்னகை போதும்... எப்போதும் அவன் கண்களில் ஒரு ஏக்கம் உண்டு யாரும் அறியா ஒன்று... ஆண்களின் மீசை தாடிக்குப் பின்னால் அத்தனை அழகு ஒளிந்திருக்கும் அத்தனையும் பல சோகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும்...
MEN
Maybe a poem or two about men.
Or perhaps ten or twelve of which this poem is the thirteenth.
Not for all
Man is the inevitable poem of nature...
Men are curious...
A man who does not know how to cry in a crowd...
Sometimes the demon is male
Sometimes he is Mother Teresa!
I wonder...
A man who does not live for himself...
Some mothers' daughter is a boy...
We don't celebrate men as much as we celebrate women....
The shy he feels is the 8th wonder and it is rare to see it...
Anger is his own thing
It is equivalent to a child's tantrum...
No one saw his tears...
Men are angels too
As a child to parents...
Brother to sister
As a husband to a girlfriend...
As a companion to his wife...
As a father to children
Men are angels too
Addressing the male class
Moron
Lazy
Patience
Useless Fellow
But it is men who pass these things off as their titles...
He also has the quality of femininity...
A smile from Either is enough to make him bow down...
There is always a longing in his eyes that no one knows...
All the beauty is hidden behind his moustache and beard
All this is hidden behind many tragedies...
By Krishna MG

Comments