ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள் (TEACHER DAY WASHES)
By Kanagasabai Chandrasekaran
தலைமுறை தலைமுறையாக
தாயகமெனும் தோட்டத்தின்
தோட்டக்காரர்களாக,
நாடிவந்த
முத்தான விதைகளை
வளர்த்தெடுத்து,
மணங்கமழும்
பூங்காவனமாக
வளர்த்தெடுத்து,
எழுத்துக்களாய் பிறப்பெடுத்த
நம்மை, கவி மாலையாக்கிடும்
வேளையில்,
எங்கே பதராகிடுவோமோ?
என்ற தயங்கம்
சிறிது எட்டிப்பார்த்தால்
போதும்!
அதை சரிசெய்யும் வரை
அந்த கரங்கள் ஓய்வெடுக்க
விரும்புவதில்லை.
சமூகத்தை உழுது பண்படுத்தி
விளைவித்தாலும்
நஷ்டப்படாதவர்கள் இந்த
"சமுக விவசாயி"கள்,
சமுதாயத்தை நிமிர்ந்திட
நீளும் முதல் கரமான
ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்.!
By Kanagasabai Chandrasekaran

Comments