What's Next?
By Shanmathee
முடிவு என தெரிந்தும்
முற்று பெறா நினைவுகளை
என்ன செய்ய
மதில் சுவர் எழுப்புகிறேன்
உன்னை தவிர்க்க
மதிலே நீயாக மாறினால்
என்ன செய்ய
தேடுகிறேன் என்னை
காண கிடைப்பது நீயானால்
என்ன செய்ய
பயணம் முற்று பெறாது
இந்த பாதையில்
இருந்தும் பயணிக்கும் பாதங்களை
என்ன செய்ய
காலை கதிரவனும் மாலை நிலவும்
நீயாக மாறினால்
என்ன செய்ய
என்னில் பதிந்து போன
உன் குரலை
என்ன செய்ய
உன்னை தினம் பார்க்கும் கண்களை
கண்டு
பொறாமை கொள்ளும் என் கண்களை
என்ன செய்ய
மாறிக்கொண்டிருக்கிறேன் உன்னால்
தெரிவை மடந்தையாய் !
By Shanmathee

Comments