Tamil Slogans on Importance of Book Reading
Updated: Jul 12, 2025
By Nomitha Baanu T
நூல்களை தினந்தோறும் சுவை - நாளை
உன்னைப் போற்றும் அவை.
நூலகம் என்பது கலங்கரை விளக்கம் – அது
அறியாமை என்னும் இருளை விலக்கும்.
நூல் பல படிப்பவர் சாதனை படைப்பவர்
சாதனை படைத்தவர் நூல் பல படித்தவர்.
வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்!
அறிவெனும் ஆலயம் சமைப்போம்
ஆர்வம் கொண்டு நூலைப் படி!
அதுவே உனக்கு வெற்றிப்படி!
அறிவுப்பெட்டகம் நம் நூலகம்
இனி அதுவே நம் தாயகம்.
உலகம் முழுவதும் போட்டி- அதற்கு
நூல்களே நல்ல வழிகாட்டி.
நூற்படிப்பு என்பது அறிவின் தாகம் – அது
என்றுமே தணியாதது ஆகும்.
உடலுக்கு மருந்து உணவாகும்
உயிருக்கு விருந்து நூலாகும்.
சாத்திரம் பலவும் கற்போம்
சரித்திரம் படைக்க முயல்வோம்.
11.பட்டம் பறக்க உதவுவது நூல்
பட்டம் பெற படிக்க வேண்டும் நூல்!
12.அறிவு நிறைந்த நூலகம் -அங்கு
அமைதி காண்பது என் அகம் !
13.உணவுக்கு சுவையூட்டும் உப்பு
வாழ்க்கைக்கு வளமூட்டும் நூற்படிப்பு!
14.நூலகம் என்பது அறிவுத்தோட்டம் - அங்கு
புத்தகங்கள் மலரின் கூட்டம்!
15.நல்ல நூல்களை ஆழ்ந்துப் படி
அதை அப்படியே கடைப்பிடி! பின்
16. நூலகத்தில் துளிர்விடுவது அறிவு
அதுவே அறியாமைக்கு முடிவு!
17. நூல்களுடன் வேண்டும் நட்பு
என்பதற்கு இல்லை மறுப்பு.
18.நூலகம் என்பது அறிவுச்சுரங்கம் –அது
என்றும் குன்றாத அறிவை வழங்கும்.
19. அமைதி கமழும் நூலகம்- அது
அறிவு ஒளிரும் ஆலயம்!
20.நூல் என்பது தேன் - அதை
நான் தினமும் சுவைத்தேன்!
21. தாயிடம் அன்பைப் பெறுவோம்!
நூலிடம் அறிவைப் பெறுவோம்!
By Nomitha Baanu T

Comments