By Nifasath Farhana
சித்தர் தேவை இல்லை,
சித்து வேலை தேவை இல்லை,
சத்தியத்தின் வழியில், தேவசித்ததுடன்
இருத்தலின் பயணமே ஆன்மீகம் .
மனதை அறிய மனதிடம் சென்று கேட்டால்,
மனம் தருவதோ இரண்டு வழி,
வழியின் தொடக்க பாதையை தேர்வு செய்யும்
தெளிந்த மனதின் முடிவே ஆன்மீகம் .
பொருளினால் காண்பது ஆனந்தம் அல்ல,
பெருமையினால் காண்பது ஆனந்தம் அல்ல,
பேராசையினால் காண்பது ஆனந்தம் அல்ல,
மனம் அன்பாய், பணிவுடன் நடத்தலின்
வழியில் காண்பது ஆன்மீக ஆனந்தம்.
மனம் அறிந்து நடப்பதே ஆன்மீகம்,
எண்ணத்தின் தூய்மையின் வழியிலே ஆன்மீகம்,
பற்று இல்லா நிலையில் இருத்தலே ஆன்மீகம்,
அன்புடன் இருத்தலே ஆன்மீகம்,
அமைதி அடைவதில் இருப்பதே ஆன்மீகம்,
நடக்கின்ற நொடிகளில் தெளிவதே ஆன்மீகம்,
நிலையான மனதில் வெளிப்படுவதே ஆன்மீகம்,
மன உறுதியே ஆன்மீகம்.
அறிவு முதிர்ச்சி அடைய முதுமை தேவை இல்லை,
இளமையில் சரியான பயிற்சியுடன் நல்ல
பண்பை பின்பற்றுதலின் விளைவே ஆன்மீக ஆரம்பம்.
ஆன்மீகம் அறிய, தெளிய, பூஜைகள் வேண்டியதில்லை
புத்தியில் தெளிவுடன் விரிந்த மனப்பான்மையுடன்
வாழ்ந்து வருவதே ஆன்மீகம் அறியும் வழியும் நெறியும்.
உணர்வடைதலின் தொடக்கமே ஆன்மீகம்,
உணர்ச்சிகளை விடுதலின் முடிவே ஆன்மீகம்.
பிறவா நிலையை வேண்டுவது ஆன்மீகம் இல்லை,
பிறந்ததின் நோக்கம் அறிவதே ஆன்மீகம்.
நல்ல எண்ணத்தின் ஆழத்தின் தெளிவதே உள் மனம்,
ஆழத்தின் வெளிச்சத்தில் தெரிவது என்னை அறிதலின் வழி,
வழியிலே விழிப்புடன் இருந்து வருவதே ஆன்மீகம்.
ஆன்மீகம் அறிய ஆன்மீக புத்தகம் தேவை இல்லை,
மனம் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று
நினைக்கும் எண்ணத்தின் மந்திரத்திலே இருப்பது ஆன்மீகம்.
இயற்கை அழகிலும் இருப்பது ஆன்மீகம்,
செயற்கையின் அறிவியலிலும் இருப்பது ஆன்மீகம்.
மனித மனம் ஆனந்தம் அடைவதற்கு வழியோ ஆன்மீகம்,
ஆனந்த நிலையில் நிலைத்து நிற்கும் தன்மையோ ஆன்மீகம்.
புன்னகைக்கும் நிமிடமே ஆன்மீகம்,
புன்னகை அடையும் வழியும் ஆன்மீகம்.
கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை,
என்று சொல்வது ஆன்மீகம் இல்லை,
கடக்கின்ற நொடிகளில் நற்சிந்தனயுடன்
வாழ்ந்து வருவதே ஆன்மீகம்.
By Nifasath Farhana
Comments