Humanity
By Deepthi Hashini S
மனிதம் வளர்
மனிதம் நெகிழியது !
நயனத்தின் இதயம் துடிக்கின்றது சிசு அநேகம்
மயானத்தில் ஓலமிடுவதைக் கண்டு
கச்சா விற்று உச்சம் பெற்று
சுயம் வளர்த்து போடு கும்மாளம்
மனிதம் அற்று பிற சவம் தின்று
அளந்து போடு குழிஆழம்
பகலவன் ஓய்ந்த பின்னும்
ஒளியும் ஓலமும் ஒழியவில்லை
காரிருளும் உமிழும் காரி
தீ உமிழும் உன் ஆயுதங்களின் மீது
வேடிக்கை பார்க்கும் விந்தை ஓநாய்களாம் ஐநா
அறிக்கை தாக்கும் சந்தை என இருக்காதே வீணா
படைத்தவனும் தலையிட வில்லை
விடுதலையின்றி கல்லுக்குள் சிறை வைக்கப்பட்டதால்
இனம் கண்டு சினம் சிந்தாதே
மனம் தனில் மனிதம் இருந்தால்..!
TRANSLATION
Develop Humanity
Humanity is nowhere.
-The heart of the eyes is wretched by seeing the cemetery flooded with the tears of infants.
Nations developed themselves by selling crude oil and celebrating by burning the corpse of their citizens.
Even the sun has set for the day still the bomb blasts and howling of manhood has not done for the day
Even the dark night spittle over the weapons that emits fire
International organizations did nothing other than submitting lame reports to the media
The creator of the world did not save the people as he is imprisoned into the stone
Let not be the antagonists over manhood if heart is really infilled with humanity
By Deepthi Hashini S

Comments