Chithiram
By Janaka K S
தன் வாழ்க்கையை சித்திரமாக வடித்துகொண்டிருந்தாள் அவள்.தன் சித்திரத்திற்கு ஓவியமும் அவளே ஓவியரும் அவளே.தன் கைகளின் வண்ண திறமையால் தன்னைத் தானே அழகுபடுத்திக்
கொண்டிருந்தாள்.இசையை சுமந்து செல்லும் தென்றலைப்போல்,தன் வாழ்க்கை வண்ணத்தை கொண்டு சென்றது வெகு தொலைவிற்கு.ஏதும் அறியாத அப்பெண் தன் ஓவியத்தை தீட்டிகொண்டிருந்தாள்.ஆச்சரியமுற்றாள்
அவள்! ஏன் ஓவியம் முடிவு கொள்ளாமல் இவ்வளவு காலம் தொடர்கிறது?
விடை கிடைக்காத அவளோ தொடர்ந்தாள் தன் ஓவியத்தை.சில நாட்கள் கடந்தன.சித்திரமே தந்தன அவளுக்கான விடையை.நிலமும் வானமும் இணைந்தது போல் சித்திரம் அமைந்தது.மகிழ்ந்தாள், அதனைப் பார்த்து.பின் உணர்ந்தாள் அச்சித்திரத்திற்கோ முடிவில்லை என்பதை.தன் மனதில் உள்ளதை அழகு படுத்தினாள் சித்திரத்தின் வாயிலாக.அவளும் அதனை எளிதில் விடுவதாகவும் இல்லை, வாழ்க்கை ஆயிற்றே.தொடர்ந்தாள் தன் ஓவியத்தை, அதனை வடித்தவாரே நாட்கள் நகருகின்றன இன்றுவரை…!
By Janaka K S

Comments