Caste Discrimination; Genocide
- Hashtag Kalakar
- Mar 20, 2023
- 4 min read
Updated: Jun 7, 2023
By Arockiacelin
மாற்றம் ஒன்று மட்டும் தான் எப்பவும் மாறாதது. இப்பவும் இந்த உலகத்துல, ஏதோ ஒரு இடத்தில் கொடூர விபத்து இயற்கை பேரிழிவு வந்திடுச்சுன்னா நாம் அவர்களுக்காக பரிதாபபட்ரோம், சீக்கிறம் நிலை மாறனும்னு prayer பன்றோம் . நாம் ரோட்டுல நடந்து போயிட்டு இருக்கோம் திடீர்ன்னு பக்கத்துல இருக்குவங்களுக்கு accident ஆகுது உடனே அவங்கள rescue பண்ண try பன்றோம். இதெல்லாம் பாக்கும் போது, இன்னும் நம்ம மனசுல ஒரு ஓரத்துல மத்தவங்க நலனுக்காக யோசிக்கும் சின்ன நல்ல மனசு இருக்குறத நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு . எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் இந்த மண்ணில் பிறக்கையில; அது நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் இந்த சமூகத்தின் வளர்ப்பினிலே . ஆமாம் நம்மையும் இந்த சமூகத்தையும் பார்த்து தானே நம்ம பிள்ளைங்க வளர்றாங்க. ஒரே ஒரு விஷியம் நினைச்ச மட்டும் தான் இந்த மனசு ஓராயிரம் ஈட்டியால் குத்திகிழிக்குற மாதிரி இருக்கு . அது என்னனு கேட்குறீங்களா ? இந்த சாதிதான் . என்னதான் இந்தியா தொழில்நுட்பமா வளர்ச்சி அடைந்தாலும், புகழின் உச்சிக்கு சென்றாலும் இந்த சாதியில் மட்டும் பெரிய மாற்றம் இல்லை . தவறுகளை சரி செய்யும் ஒரே ஆயுதம் கல்வி, சில இடங்களில் கல்வியோட பெரிய முன்னேற்றமா நம் முன்னோர்கள் அனுபவிச்ச கொடுமைகள் இப்போ படிபடியா குறைந்துகிட்டே வருது . ஒரு காலத்துல இன்னார்தான் கோவிலுக்கு உள்ள போகனும், இன்னார் தான் ஊர்ல இருக்கிற எல்லார் துணிகளையும் துவைக்கனும், உயர்சாதிகாரங்க மட்டும் தான் மிக உயர்ந்த கல்வி படிக்கணும்னு, ஒரு வட்டார வழக்கமாகவே இருந்துச்சி . But , இன்னைக்கு நிரைய மாற்றம் நடந்திருக்கு ... நான் அதுக்காக ரொம்ப சந்தோஷ பட்ரேன் . At the same time , எல்லா விஷியத்துலயும் நாம் மாறிட்டோம்னா கண்டிப்பாக இல்லை, இன்னுமே இந்த கல்யாணம் பேச்சு வரும்போது இந்த சாதி மிகப்பெரிய ஒரு placement or role பிடிச்சிருக்குன்னு சொல்லாம் . நம்ம parents இதுல இருந்து வெளிய வரலாம்னு நினைச்சாலும் இந்த society அதுல இருக்கிற நம்ம சொந்தகாரங்க வர விட மாட்டாங்க . எல்லோருக்கும் இரண்டு கை கால் தானே ? உடம்பில் ஓடும் இரத்தம் சிவப்பு கலர்ல தானே??? இல்ல இந்த சாதி கோடி அல்லது கையிரு மாதிரி கலர் கலராவா இருக்குது . பின்ன எதுக்கு இன்னும் இந்த சாதிய பிடிச்சு தொங்கிட்டு இருக்கனும் . இந்த மாதிரி ஆளுங்களுக்கு நான் ஒன்னு சொல்ல விரும்புறேன். Just one time , government hospital க்கு ஒரு visit போயிட்டு வாங்க அங்கு cancer ward ,burns unit, ICU மற்றும் Accident zone இப்படிபட்ட department ல எத்தனை பேர் உயிருக்கு போராடிட்டு இருக்காங்க தெரியுமா ? வாழவும் முடியாம சாகவும் முடியாம சிருகச்சிருக செத்துகிட்டு இருக்காங்க தெரியுமா? Doctor or nurses கால பிடிச்சிட்டு அழுதுகிட்டு இருக்காங்க தெரியுமா? அவங்கள பார்க்கும் போது அப்போ உங்களுக்கு புரியும் இந்த உயிரோட value என்னவென்று . அது தெரியாம தான பெத்த புள்ளங்கன்னு பாக்காம இந்த useless சாதிக்காக வெட்டி கொல பண்றீங்க, இல்ல இந்த உறவுகள விட்டு ஒதுக்கி வைக்குறீங்க . Please போதுமே ! இனியும் இந்த சாதிய continue பண்ண வேணாமே . சமீபத்துல tamilnadu ல நடந்த ஒரு ஆணவகொலை பத்தி பேச விரும்புறேன். அவங்க ஒரு Nurse , Chennai ல private hospital ல வேளை செய்றாங்க , கூட பணி புறிகிற பையனோட காதல் வருது . வாழ்க்கைய சந்தோஷமா வாழ ஆரம்பிக்குறாங்க வீட்டுல எப்படியோ செய்தி தெரிய வருது . காதலர்கள் ரொம்ப போராட்றாங்க finally பையன் வீட்டுல ok சொல்லிட்டாங்க . But , பொண்ணு வீட்டுல அந்த பொண்ண அடிச்சு உதச்சு கொடுமைப்படுத்தி அவசர கல்யாணம் பண்ண தீர்மானம் பண்றாங்க, தன் சாதியிலே மாப்ள தேட்றாங்க . அதுக்குள்ளாக காதலர்கள் மேஜர்ங்குறதால வீட்டவிட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிகுறாங்க . இது தெரிஞ்ச பொண்ணு வீட்டுல அவங்கள தேடி அலஞ்சி கண்டுபிடிக்குறாங்க . அன்பா பேசி, நாங்க தப்பா புரிஞ்சிகிட்டோம் எங்கள மன்னிச்சிடும்மா, நாங்க பொண்ணு வீட்டு மோற செய்யனும்னு பாசமாபேசி வீட்டுக்கு கூட்டிட்டு போராங்க இந்த அப்பாவி தம்பதிகள. பாவும் அவங்களுக்கு தெரியாது அடுத்த 24 மணி நேரத்துல அவங்க சாக போறாங்கன்னு . நிறைய கனவுகளோடு வாழ்க்கைய ரசிச்சு ருசிச்சு வாழப்போரோம் என்று நம்பிக்கையோடு வீட்டுக்கு வராங்க, வீட்டுல காலடி எடுத்து வைச்ச அடுத்த கணம் பொண்ணோட அண்ணன் அருவாள் எடுத்து அந்த இளம் தம்பதிகள வெட்டி சாச்சான் வாழதண்டு மாதிரி , காதலர்கள் இரண்டு பேரும் எதிரும் புதிருமாக வீழ்ந்து மடிந்து போனாங்க . சாகப்போற அந்த ஒரு கனம் அந்த பொண்ணு என்னவெல்லாம் நினைத்திருப்பா ? இப்படி என்ன பாதியில கொலை பண்ணத்தான் 10 மாதம் சுமந்து பெத்தெடுத்தியா அம்மா??? வீண் பிடிவாதத்துக்கும் இந்த வீணாபோன சாதிக்கும் என்ன பலி ஆடாக அருத்துடீங்களே அப்பா ??? குடும்ப கௌவரவத்துக்காக ஒன்னுத்துக்கும் உதவாத இந்த சாதிக்காக உன் தங்கமான தங்கச்சியையே வெட்டி கொன்னுட்டயே அண்ணா??? மன்னிச்சிடுடா காதலா இந்த பாவிய காதலிச்சு கல்யாணம் பண்ண ஒரே காரணத்துக்காக உன் உயிரையே எடுத்துட்டாங்க இந்த கொலைகாரங்கன்னு எப்டிலாம் அந்த உசுரு துடிச்சிருக்கும் . காதலிச்சு கல்யாணம் பண்ணத தவிர வேறு என்ன தப்பு பண்ணச்சு அந்த 2 ஆத்துமாவும் ??? யாருக்காக அந்த கொலைய அந்த பெத்தவங்க பண்ணிருப்பாங்க ??? குடும்ப கௌவரத்துகாகவா இல்ல இந்த இத்துபோன சமூகத்துக்காகவா ??? எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது நம்ம சமூகத்துக்கும் , நமக்கும் பயன் அளிச்சதுன்னா அதுக்கு encourage பண்ணலாம் . ஆனால் இந்த சாதி, வன்முறைய தூண்டுது , கலவரத்த செய்ய வைக்குது , கொலை செய்ய காரணமாக இருக்குது, இப்படி மனிதனை மிருகமாக மாத்துற இந்த சாதிய ஏன் இன்னும் கொண்டாடனும்??? Just one second think பன்னி பாத்தா உங்களுக்கு புரியும் . அந்த ஆணவபடுகொலை பண்ணுங்க மட்டும் ரொம்ப சந்தோஷமாவா இருப்பாங்க சத்தாயமா இல்ல , சாகும்வரை குற்ற உணர்ச்சி, ஜெயில் தண்டனை , கொலைகார குடும்பம் என்ற பட்டம் . யாருக்காக, எந்த சமூகத்துக்காக இந்த கொலை பண்ணாங்களோ அவங்களே கைவிட்டுவிடுவாங்க கால போக்கில் . So , இப்படி யாருக்கும் உபயோகம் இல்லாத சாதிக்காக இன்னும் எத்தனை உயிர்பலி குடுக்க போறோம் ??? மரணம் வருவதை மனிதன் அறிவதில்லை, தருணம் இதுவென இறைவன் அழைப்பதில்லை, பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம் . பூவும் உதிர்ந்திடும், புல்லும் உலர்ந்திடும், இங்கு நிரந்தரமென எதுவும் இல்லை. நம்ம life span ரொம்ப சின்னது . முன்னலாம் 100 வயது வாழ்ந்தாலே பெரிய விஷியமா சொல்ல மாட்டாங்க , இப்பல்லாம் 60, 70 வயது தாண்டனாலே சாதனைமனயா சொல்றாங்க . மண்ணுக்கு போகும் போது நிர்வாணமாக தான் போக போரோம்... நம்ம கூட கணவனோ, மனைவியோ , பிள்ளைங்களோ, சேத்து வச்ச சொத்தோ இல்ல இந்த சொந்தபந்தமோ எதுவும் வரமா வெற்றுடலாதான் நம்மை புதைப்பாங்க இல்ல எரிப்பாங்க . வாழ போற இந்த கொஞ்ச காலத்துல ஏன் இவ்வளவு பாகுபாடு ???சாதி , மதம், படிச்சவன், படிக்காதவன்,பணக்காரன்,ஏழை, இப்படி எத்தனையோ.... Just think one second......
இந்த சாதிக்காக நான் எழுதிய கவிகதை உங்களுக்காக ......
இன்னும் எத்தனை உயிர்களை குடிப்பாய் சாதியே?????
ஆண்டவன் படைத்தான் இவ்வுலகை
வெரும் ஆணும் பெண்ணுமாக;
இதில் எப்படி பிறந்தது சாதி ????
அறிவை பெற்றவன் பிரித்தான்
மனிதனை பாதிபாதியாக - தன்
சுயலாபத்திற்காக இப்படிதான் ,
பிறந்திருக்குமோ இந்த உபயோகமற்ற சாதி ???
நிலையில்லா வாழ்விற்கு நிரந்தர
சாதி சங்கம் எதுக்கைய்யா ????
பாதியில முடிந்து போகும் மனித வாழ்விற்கு
உயர்சாதி என்ற வீண் பெருமை எதற்கைய்யா ???
விலையில்லா மனித உயிரை - உன்
சாதி என்ற straw போட்டு இன்னும்
எத்தனை காலம் உறிஞ்சபோகிறாய்???
உருகி உருகி காதலித்தவர்கள் - இன்றும்
கதறி கதறி செத்து
கொண்டிருக்கிறார்கள் கல்லறையில்
உன் இரக்கமற்ற சாதிவெறியால் ..... .
சுனாமியில் தப்பி பிழைத்தவன்
கொரொனாவில் மடிந்தான் - அதிலும்
பிழைத்த நம்மில் சிலருக்கு இந்த சாதிநோய் மட்டும்
என்னவோ இன்னும் தீரவேயில்லை ....
என்ன செய்ய வீண் பெருமைக்கும் இந்த
வீணாபோன சமூகத்திற்கும் பயந்து
பெற்ற பிள்ளைகளை குத்தி கொலை
செய்யும் பெற்றோர் தானே நாம் ......
கீழ்சாதி மேல்சாதி என ஏன் பார்க்கிறாய் ????
எவனாய் இருந்தாலும் அவன் மனிதனால்
இரத்தம், சதை, நரம்பு, நாளம், மலம் என
எல்லாமே ஒன்றாய் தானே இருக்கிறது ???
இதை உன் மனம் ஏன் ஏற்க மறுக்கிறது ???
சாதியை போற்றும் சரித்திரவாதிகளே !
கண்மூடி தூங்கினால் நம் நாளை விடியல்
வருமோ இல்லை வராதோ இத்தோடு
உன் சாதியை விடுமைய்யா ....
என் சாவே உன் சாதிவெறிக்கு பரிகார
பலியாக பொகட்டும்
இத்தோடு சாதியை விடுமைய்யா....
இப்படிக்கு கல்லறையில் கருகி
கொண்டிருப்பவளின் ஆத்துமா !!!!!!!
இனியாவதுசாதி, என்பது ஒரு பாவச்செயல்; , தீண்டாமை ஒரு கெட்டவார்த்தை, இந்த உலகில் இருக்கும் அனைவரும் நம் உறவுகள் மற்றும் நண்பர்கள் என்பதை நம் அடுத்த தலைமுறையினருக்கு கற்று கொடுப்போமா ????
By Arockiacelin

Comments