A Girl Child
By Deepthi Hashini S
3. பெண் குழந்தை
குயவன் அவன் செய்த வினை முற்றானது
பெண் என்னும் உன்னதம் தனில்
அற்பம் அற்புதமானது அவள் உருவில்
விளைந்தது மனிதம் அவள் கருவில்
ஏவாள் அவள் தாயும் ஆவாள் சேயும் ஆவாள்
ஏந்திழை அவள் மனிதனின் ஏழாம் அறிவாம்
ஏலாதி அவள் எத்தனுக்கும் எச்சரிக்கை
எழுகடல் அவள் எழும்பினால் சர்வம் முற்றும்
அகரம் அவள் கடைப்பெயரென அந்தம் ஆகாள்
மந்தகாசம் சிந்தும் மகரந்தம் அவள்
அந்தகாரம் செய்யும் கந்தகமும் அவள்
ஆவிரை அலகை அந்தத் தெரிவை
உலகை ஆள வந்த பாவை
தையல் அவள் மையல் கொள்ளச் செய்யும் மகத்துவம்
அவளென ஆவதற்கு புரிய வேண்டும் மாதவம்
Translation
3. A girl Child
A potter (creator of the world) done with his work after creating a holy creature called women.
A trivial turns out into a wonder
She cultivated humane into her womb
Eve She is, she takes the dual role of mother as well as child
Queen She is, she is the seventh sense of manhood
Warrior She is, she gives warning for everyone
Ocean She is, she ends everything with her anger
She stands first, seldom she holds the last name for anyone
She sheds love throughout the world
She explodes everything with her ferocious nature sometimes
She could measure and recreate the whole world like a genius
But dressed up like a pity doll
She enchants the world with her grace
One has to muse for the lifetime to become divine like HER.
By Deepthi Hashini S

Comments