நட்பு
By Jeyanthi R
ஆசைக்கே ஆசை வரும்
உன்னுடன் பழக,
அழுகைக்கே அழுகை வரும்
உன்னை விட்டு விலக,
கோபத்திற்கே கோபம் வரும்
உன்னை இகழ,
இன்பத்திற்கே இன்பம் பொங்கும்
உன்னகம் மகிழ,
வெட்கத்திற்கே வெட்கம் வரும்
உன் முகத்தில் புன்னகை தவழ,
மறதிக்கே மறந்து போகும்
உன்னுடனான நாளை மறக்க,
வேண்டுதலே வேண்டுதல் வைக்கும்
மீண்டும் ஒரு ஜென்மம் வாழ,
இறந்த காலம் வழக்குத் தொடுக்கும்
நிகழ்காலம் குடை பிடிக்கும்
வருங்காலம் வாசல் நோக்கும்
இறைவனே இமைப்பொழுது
இறங்கி வருவான் உன்னுடன் நட்புக்கொள்ள.
By Jeyanthi R

Comments