ஞானம்
Updated: Jul 15, 2025
By Jagathisan P
திருவண்ணாமலையில்
தியானம் செய்யும் முறைகள் கற்றாயா ?
நாளும் பொழுதும் செய்ததன் மூலம்
ஞானம் பெற்றாயா?
அரச மரத்தை போதி மரமாய் மாற்றிட சென்றாயா?
அதிலே காய்த்த ஞானப்பழத்தை அருந்திட சென்றாயா?
உன்னை விட்டு உன்னுள் சென்று உன்னை கண்டாயா?
உன்னுள் இருக்கும் உலகம் சுற்றி உவகை கொண்டாயா?
உயிருடன் இருக்கும் போதே இறந்து மீண்டும் பிறந்தாயா?
இருளும் ஒளியும் இல்லா வேளையில் இறைவனைக் கண்டாயா?
இறைவன் உன்னிடம் சொல்லிய தத்துவம்
எளிதில் அறிந்தாயா?
இருளில் கண்கள் மூடிய நிலையில் ஒளியைக் கண்டாயா
பகலில் கண்கள் திறந்தே
உலகம் உறங்கிட கண்டாயா?
மனமும் உடலும் வலிமை ஏற்றிட மந்திரம் கற்றாயா?
உடனிருப்போரின் உடல்வலி உணர்வை
நீயும் உனர்ந்தாயா?
மன வலி தீர மன வழியாக
மருந்துகள் கொடுப்பாயா
பின்னாள் வருவதை
பிசகில்லாமல் இன்னாள் உணர்ந்தாயா?
சொன்னால் புரியாதவையும் கூட சொல்லாதுணர்ந்தாயா?
துன்பம் துயரம் தூர விரட்டும் சூட்சுமம்
கண்டாயா?
இன்பம் என்றும் எவரும் பெற்றிட இலக்கணம் சொல்வாயா?
உலகம் உயர கலகம் வீழ
உபாயம் புரிவாயா ?
வருவோர் போவோர் வளமுடன் வாழ்ந்திட
வரங்கள் தருவாயா?
By Jagathisan P

Comments