கோபம்
By Jeyanthi R
இப்போட்டிவுலக போர்க்களத்தில் போராடும் போராளி நான்
நீ எனக்குள் உன்னதமாய் உருவெடுத்து
உண்மை நிலை உணர்த்துகிறாய்என் வெளி வேடத்தை வேகமாய் களைத்துவிட்டு
தன்னிலை தடம் நோக்கி தடையின்றி செலுத்துகிறாய்
உன்னோடு நானெடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும்
உபத்திரங்களை தந்திடும் ஓயாமல் பிறருள்ளும்
இறைவனிடம் வேண்டுகிறேன்
இமைப்பொழுதில் தந்தருள
நீ இல்லா வாழ்வல்ல
உன்னை ஆளும் வல்லமையே
நீயோ என்னை மறைக்கும் புறை
உன்னை ஆளத்தெரியாத என் வாழ்வோ சிறை
உம்மை ஆளும் எஜமானாய்
மெய்ப்பொருள் உணர்ந்தவளாய்
மகிழ்ந்து வாழ ஆசையே
வாழவிடு மானிடப்பகையே
By Jeyanthi R

Comments