அப்பா
By Jeyanthi R
உறங்க விடா உள்ளச்சுமைகள்
மனதை நெய்யாய் உருக்கி
தீயாய் எரித்தாலும்
கண்டுணர்ந்து கேட்டாலேத் தவிர
தானாக வெளிக்காட்டாத தந்தை மனம்.
நடுக்கடலில் திசைத்தேடும்
கப்பலாய் உன் மனம்
அலைக்கழித்தாலும் இன்முகந்தவிர
வேறுமுகங் காட்டாத
பன்முகக்கலைஞரே !
எண்ணற்ற சுதந்திரத்தை
ஏராளமாய் அள்ளித் தந்த
விடுதலை வேந்தனே !
இல்லை என வருவோர்க்கு
இல்லை என கூறாமல்
அறிய தேவையோடு வருவோர்க்கு
சிறிய தேவையேனும் பூர்த்தி செய்யும்
கொடுக்கும் கரமே !
என் அனுதின நிகழ்வுகளை
தங்களிடம் மறைக்க நினைத்ததில்லை
பல தொல்லை என்னைத் தொடர்ந்தாலும்,
நீர் என்னை நம்ப மறுத்ததில்லை.
பல வரம் தர
பரமனை பிரார்த்திக்கின்றேன்
கோடி நன்றி நவில்கின்றேன்
பெற்றோரை தேர்ந்தெடுக்கும் வரம் தரவில்லை என.
தங்களின் நம்பிக்கை விதை
என்னுள் விதைக்கப்பட்டுள்ளது
அது பட்ட மரமாய் சாயாமல்
பசுமையுடனும் பல வேர்களுடனும்
இப்பூமியினுள் பாயும்.
புரிதலுள்ள முதலாவது தெய்வத்தைத் தந்த
அனைத்து இரண்டாவது தெய்வங்களுக்கும் நன்றிகள்.
ஐந்து விரல்களும் சரியல்ல,
அறியாமை ஒரு குறையல்ல,
அறிந்து கொள்ளாமை முறையல்ல,
என்ற தாரக மந்திரத்தின் தலைவனே!
என்
முதற் தோழனே,
இன்முகக் கலைவனே,
விடுதலை வேந்தனே,
நம்பிக்கை நாயகனே,
உற்சாக ஊற்றே,
அன்பின் அருவியே,
உள்ளமறிந்த உத்தமரே.
எனக்குப் போல் அப்பா
இவ்வுலகினில்
யாவருக்கும் கிடைக்க
பிரார்த்திப்பேன் !!
By Jeyanthi R

Comments