வலி
By Jeyanthi R
நீ என் தாயினுள் வந்த பின்னே
நான் இப்பூவுலகில் வந்தினைன்தேன்.
பெற்ற தாய் என்னை மறந்தாலும் ,
வளர்த்த தந்தை என்னை மறந்தாலும்,
சண்டையிட்ட சகோத(ர)ரி என்னை மறந்தாலும்,
உடன் வலம் வரும் உற்ற தோழி என்னை மறந்தாலும்,
பிறப்பு முதல் இறப்பு வரை நீ மட்டும்என்னை தொடர்கிறாய்.
மனதிலோ ,உடலிலோ, மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ,
சில நேரம் சுகமளிக்கிறாய்.
பல நேரம் சோகமளிக்கிறாய்.
களர் நிலம் போன்ற மனதையும் பக்குவமாய் பதப்படுத்தி, நல்ல விளை நிலமாய் மாற்றியமைக்கிறாய்.
By Jeyanthi R

Comments