வறண்ட பூமி
By Sarathkumar Rajendiran
தன்னந்தனிக் காட்டுக்குள்ள
தண்ணி தூக்கி போறவளே..
வேகாத வெயிலில
வெறுங்காலில் நடந்து வந்தே…
நா முழுதும் வறண்டுருக்கு
நாவ நனைக்க தண்ணீர் கொடாம்மா..
ஒத்தையடி பாதையில ஓய்வெதும் எடுக்காம
ஒத்தயில போறவரே…
யார் அய்யா நீங்க….?
காயும் வெயிலில காலணியுமில்லாம
கால்கடுக்க நடக்குறீரே...
காரணம் என்னய்யா…?
வண்டி வண்டியா நெல் விளைச்சி – பிறர்
வயிறு நெறைய சோறு போட்ட
விவசாயி நானம்மா…!
ஆனால் இப்போ…
வெறும் வயிற்றோடு நானிருந்து,,
வழி ஏதும் அறியாம..,
பசியோடு திரியும் பரதேசி நனாம்மா..
வணங்கி விளைஞ்ச பயிரெல்லாம்…,
பதரா மாறி கிடைக்குதம்மா..!
மழைதண்ணி எதுமில்ல.,
மண்ணுக்குள்ளும் ஈரமில்ல…,
மார்க்கம் ஒன்னும் கிடைக்காம…!
கார்ப்பரேட்டு காரனுக்கு
காட்டையும் வித்துபுட்டே…!
காசு எல்லாம் தீந்துருச்சி…,
பசி மட்டும் தீரலம்மா…!
காலநில மாறி போச்சி காலமும் ஓடிப்போச்சி
கால் போன போக்குல
கிழவ நானும் போறனம்மா...!
வறண்டு போன நாக்குக்கு
தண்ணி தர நீ இருந்த
வாடி கிடக்கும் வயலுக்கு
வருணன் என்ன செய்வானோ…!
வறண்ட பூமியையும்..,
வளர்ச்சி பெற்ற வையமென
வாய் நிறைய போற்றுதே…
பாழ போன உலகமம்மா…..!
By Sarathkumar Rajendiran

Comments