வர்ணம்
By Janaka K S
கூடு விட்டு வெளியுலகம்
கண்டு சிறகடித்தாய்...!
மலரின் தேன் உண்டு..
சுதந்திரமாய் சுற்றினாய்..!
உன் அழகான வண்ணம் பார்த்து
பொறாமை கொண்ட
வானமோ!
மேகங்களை விட்டு கைதாக்கி
தனக்கான வர்ணங்களை..
பூசிகொள்கிறது...!
மழை பொழுதில்...
வானவில்லாக !
By Janaka K S

Comments