வேண்டுதல்
By Jeevitha S (ஜீவந்த் )
நிலைபெற்ற வாழ்வை அடைய
நிராகரிப்புகள் நிச்சயம் வேண்டும் !!
நிராகரிப்புகள்
தோல்வியின் சறுக்கல்களாய் இல்லாமல்
வெற்றியின் படிகட்டுகளாய் மாற வேண்டும் !!
படிக்கட்டுகள்
பிறரின் உதாசீனத்தால் உடையாமல்
உள்ளுணர்வின் தேடல்களால்உயர வேண்டும் !!
தேடல்கள்
பணத்தை அள்ளும் பாதையாய் இல்லாமல்
மனதை வெல்லும் மார்க்கமாய் அமைய வேண்டும் !!
மார்க்கம்
மிரட்டும் இருட்டாய் இருந்தாலும்
மீண்டு எழ நெஞ்சத் துணிவு வேண்டும் !!
நெஞ்சம்
அன்பு இழந்த போதும் புயல் அடித்த போதும்
ஆறுதல் பெற தெய்வ அருள் வேண்டும் !!
தெய்வம்
கல்லால் ஆன சிற்பம் மட்டும் அல்லாமல்
சொல்லால் வாழும் மாந்தராய் இருக்க வேண்டும் !!
By Jeevitha S (ஜீவந்த் )

Comments