வாசிப்பு
By Jeevitha S (ஜீவந்த் )
இரவும் பகலும் போதவில்லை
அலுவல் பணி நினைவில்லை
சுமைகள் யாவும் பாரமில்லை
அழுத்தம் துறந்து மனமோ
அமைதியின் நிலையில் !
ஆம் அது
அன்றாட வாழ்வில்
அலாதியான இடைவேளை
கற்பனை மாந்தருடன்
கரைபுரளும் உள்ளம்
கனவாய் கதையிலே
திளைக்கும் மனம்
இரு விழிகளும்
ஒரு சேர பயணிக்க
உளமார நானும்
பயணம் ஆகின்றேன்
பக்கம் பக்கமாய்
புத்தகத்தின் (போ)பாதையில்
அறியாமல் அறியாமையை
உதிர்க்கிறேன் சிறகுகளாய் !!
By Jeevitha S (ஜீவந்த் )

Comments