வாகை சூட வா
By Jeevitha S (ஜீவந்த் )
தடுக்கி விழுந்து எழுந்தால்தான்
துள்ளிக் குதித்து ஓட முடியும்
வெற்றியின் பாதை அடைய
தோல்வியின் கரடுமுரடுகளை
கடந்து வா !!
கசப்பின் வலியை உணர்ந்தால்தான்
இனிமையின் ருசியை சுவைக்க முடியும்
வெற்றியின் கனியைப் பறிக்க
தோல்வியின் காய்களை
சுவைத்து வா !!
உச்சி வெயிலின் தணலில்தான்
குளிர் தென்றலின் அருமை புரியும்
வெற்றியின் அமைதிதீபம் அடைய
தோல்வியின் புயல்களை
எதிர்த்து வா !!
மேடு ஏறும் போதுதான் பள்ளங்களை
கடந்த சக்தியின் தேவை புரியும்
வெற்றியின் நிலையான உச்சிகளைத் தொட
தோல்வியின் நிலையில்லா ஆழங்களைத்
தொட்டு வா !!
By Jeevitha S (ஜீவந்த் )

Comments