மழையில் நான்
Updated: Dec 7, 2022
By M Santhosh Kumar
நித்திய மழையே...
4 மாதத்திற்கு பிறகு என்னையும், என் இமைகளையும் நனைத்தாய்...
என் வெப்பத்தைக் குறைத்தாய்.. .
என் புலன்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தாய்..
உயர் மின்னழுத்தத்தை பாய்ச்சுவது போல் தொட்டாய்..
அறுசுவைகள் கலந்த அமிர்தம் போல் சுவைத்தாய்...
சுவாசக் காற்றை மறக்கிற அளவிற்கு முகர்ந்தாய்...
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே தொப்புள் கொடியைப் போல் காட்சி அளித்தாய்..
சப்தமும் நிசப்தமும் கலந்து ஸ்ருதி, லயம் கொண்டு ஒலித்தாய்...
மனதை பரவசத்தின் உச்சிக்கு கொண்டு சென்றாய்...
ஆனால், மனதின் ஓரத்தில் ஒரு வருத்தம்..
உன் வருகையை அவ்வப்போது தள்ளிப்போடுகிறாய்..
எனினும் நம் தீராக்காதல் தொடரும்....
Translation:
MYSELF IN THE RAIN
Oh eternal rain!
After 4 months, you wet me and my eyelids…
Took my heat down…
Refreshed my senses…
Touched as if high voltage was flowing…
Tasted like nectar mixed with delicious flavors...
Smelled so much that I forgot to breathe...
Exhibited like the umbilical cord between the sky and the earth...
Resonated with right pitch and rhythm, striking a balance between sound and silence...
Carried the mind to the peak of ecstasy...
But, a regret in the corner of my mind...
You keep postponing your visit…
No matter what, our boundless love will exist….
By M Santhosh Kumar

Comments