top of page

மலர்களுக்கின்று மணநாள்

Feb 9, 2023
2 min read

By Jagan


இருவேறு தோட்டத்தில்

பூத்த மலர்களுக்கின்று

மணநாள்


நட்சத்திரங்களெல்லாம்

நாணம் கொள்ளும் நன்னாள்


சின்னப் பறவைகள்

சிறகடிக்கும் இந்நாள்

செம்பூக்கள் பூத்து

செழிக்கும் செந்நாள்


இஸ்ரோ விஞ்ஞானிகள்

இதை கவனிக்க

மறந்துவிட்டனர் போலும்


வியாழன் கிரகத்து

ஆண் நிலவும்

பூமி கிரகத்து

பெண் நிலவும்

காதல் கரம் கோர்த்து

நடந்ந நிகழ்வுகளை.


கவனிக்கவில்லை...


கவனித்திருந்தால் இந்த காதல்

விண்வெளியில் ஒரு அதிய

நிகழ்வாக பதிவாகியிருக்கும்.


மணமக்கள் கழுத்தில்

பூமாலை அணிவித்த

முட்டாள் எவனவன்?


தென்றலை கயிறாக

திரித்து அந்த மேகங்களை

அதில் கட்டி இழுத்து

வாருங்கள்


பூவினும் மென்மையான

அந்த மேகங்களை

இந்த பூக்களுக்கு

மாலையாக அணிவிப்பதே

உகந்தது

மேகமாலை சூடும் மணவாளா!


காத்திருந்து தவம்

செய்தாலும் கடவுள்

கண்ணெதிரே வருவதில்லை


காத்திருந்த காதல்

பல தடைகளையுடைத்து

தலைநிமிர்ந்துவிட்டது


இதுதான்...

இதுதான் வாழ்வின் தேவை.


கடவுள் நம்பிக்கையை

காட்டிலும் தன்னம்பிக்கை

பலமானது.


அன்டார்டிகா பனியில்

வாழும் பனிமனிதனாயினும்

ஆப்பிரிக்க மண்ணில்

வாழும் கருப்பு மனிதனாயினும்


மனிதன்...

மனிதன்தான்...


உடல்கள் வேறாயினும்

உயிர்கள் ஒன்றுதானே!


இருவேறு தோட்டத்து

பூவாயினும் வாசனை

ஒன்றுதானே!


மாற்றான் வீட்டு தோட்டத்து

மல்லிகைக்கு மட்டுமென்ன

சாக்கடையின் வாசனையா?


தோட்டக்காரன் பேதம் பார்த்தாலும்

சூழ்ச்சிக்காரன் வேதம் செய்தாலும்


மல்லிகைக்கு மணம் ஒன்றுதன்

மனுசனுக்கு சாதி இரண்டுதான்.


தான் சேர்த்ததை பிறருக்கு

கொடுத்து மகிழ்வோன் உயர்ந்தோன்

தான் சேர்த்ததை தானே

உண்டு பெருத்தோன் தாழ்ந்தோன்


உன்னிடமிருந்த இதயத்தை

அவளுக்கு கொடுத்த நீ

உயர்ந்தோன்.




The wedding of superior man


Wedding day for

Blossomed flowers in

two different gardens


Stars shining with shy

to make the day great


Today is the day for

the little birds to fly

Today is the day for

red flowers to bloom


ISRO scientists seem to have

forgotten to notice this


Jupiter's male moon and

Earth's female moon

walked hand in hand with love


This romance would have been

reported as an extreme event

in space, if noticed


Twist the breeze into a rope and

pull the clouds into it


It is best to wear those clouds

that are soft as a flower in

the evening for these two flowers


Hey, the groom!


God does not come before us

even after the great tapas


But,


The waiting love has come to

wedding after broken

the many obstacles.


This is...

This is the need of life



Self-confidence is more

stronger than faith in God.


The snowman who lives in the

Antarctic ice though

The black man who lives on

African soil though

Human is human


The skin colors are different though

Souls are one!


The flowers can Blossom

in two different gardens

but the smells are the same


Will the other gardens

Jasmines waft the scent

like a sewer?


Although the gardener sees the difference

Although the ruse man does the scriptures

The scent of jasmine is one and

Humans have only two castes.


The people who see the happiness

in giving is superior caste

The people who don't have a mind

giving is an inferior caste.


The heart you had

You gave it to her

So, you are superior.


By Jagan





Recent Posts

See All
Mirrored Truth

By Rufaida Manzoor I stood beside the silent lake, With eyes that felt no urge to break. My hair fell low in shadows deep, The waters...

 
 
 
My Antidote

By Anveeksha Reddy You fill my books with your ink, seeping into the pages bright and brilliant The words etched into the cracks of it,...

 
 
 
Avarice

By Anveeksha Reddy You tear my skin and pick on my bones I label it as gluttony for you Churning and shattering the remains of my...

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page