மனிதா நீ என்ன செய்தாய்?????
By Arockiacelin
மாதவன் மடியிலிருந்து,
உருவமில்லாமல் ஊற்றெடுத்து ,
மலைகளின் மார்பினில் புகுந்து,
இஞ்சி இடுப்பினில் வழிந்து,
அருவி கோளம் முடிந்து,
மடுவை நதியாய்,
மரங்களின் கால்களை நனைத்து,
செடி கொடி புல்களின் தலைகோதி,
ஓடையிலும் நடைபாதையிலும்,
தோய்வுறாமல் நடந்து,
கடைசியில் கடலென்ற,
கன்னியை அடைகிறேன்,
என் பிறப்பிற்கு அர்த்தமொன்றை
படைக்கிறேன் .......
மனிதா!!!!!!
நீ வந்தாய் ; வாழ்ந்தாய்
என்ற பதிவுக்கு
என்ன செய்தாய்?????
மனித பிறப்பே அரிது -அதில்
உதித்தேன் உலர்ந்தேன்
என்றில்லாமல் .....
வாழ்க்கை வானில் மின்னி
தடம் பதித்தேன் - என
வரலாறு பேச
வாழ்ந்து காட்டுடா......
வீழ்ந்தாலும் வெற்றியுடன் எழுந்து,
வீர கொடி நாட்டுடா .......
ஏனெனில், நீ
பூமியின் விந்து - இந்த
மனித குலத்தின் சொத்து ......!!!!
By Arockiacelin

Comments