top of page

முதல் காதல் - By Rusjanthi Piratheepan

Aug 15
2 min read

Written By: Rusjanthi Piratheepan

Category: Poetry

Competition: Global Poetry and Creative Writing Competition 2026

In the Global Poetry and Creative Writing Competition 2026, Rusjanthi Piratheepan presents "முதல் காதல்," a poignant piece in the category of Poetry. This work delves into the tender and evocative emotions surrounding the theme of first love. Through the lens of memory and reflection, the poem invites readers to journey through the intimate and often unspoken nuances of young love.

About the Work

"முதல் காதல்" offers a rich tapestry of emotions, weaving together the innocence and intensity of a first romantic encounter. The poem is imbued with vivid imagery and heartfelt introspection, capturing the bittersweet blend of joy, nostalgia, and longing. It eloquently explores the duality of love - the smiles and tears, the acceptance and the unfulfilled dreams - all wrapped in the simplicity and complexity of young affection.

முதல் காதல்

Original Submission by Rusjanthi Piratheepan

முதல் காதல்

இன்று …

பல நாட்களின் நகர்விற்குப்பின்

என்றோ காதலித்து ஒலித்து வைத்த காதல் நினைவுகளை

யாரோடும் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு இல்லாமல்

மனதோடு உரையாடல் தொடர

அழகிய நினைவுகள் எட்டிப்பார்க்க

எனை மறந்து ஓர் பயணம்

உன் நினைவில்…

காதல் என்றால் என்னவென்றே தெரியாத அவளை

அவ்வளவு அழகாக காதலிக்க கற்று தந்து

காதல் நினைவுகளை பரிசாக பரிசளித்து

இன்று - உன் நினைவால்

இதழோரம் புன்னகை

இமையோரம் கண்ணீர்த்துளி என எட்டிப்பார்க்க வைத்துவிட்டாய்

எல்லோரைப் போலவும் என் காதல் இல்லவே இல்லை

உன் மீது நான் கொண்ட காதல்

பலரைக் காதல் செய்ய காரணமாய் அமைந்தது

ஒரு தலைக்காதல் கொண்டதாலோ என்னமோ

அவ்வளவு அழகாய் தெரிகிறது என் காதல்.

மறைத்து வைக்க மனமில்லாமல்

எப்படியோ வெளிப்பட்டு போனது.

யார் என்ற அறிமுகம் அதற்கில்லை

யாரோ என்று கடந்து போக வழியுமில்லை

சிறு புன்னகை முகம் காட்டி வரவேற்கப்பட்டது - ஏற்றுக்கொள்ளப்பட்டது என் காதல்

இந்த காதல் மட்டும் ஏனோ என்றுமே தோல்வியை சந்தித்ததில்லை

ஓடிப்பிடித்து ஒன்றாய் சிரித்து மகிழ்ந்து

என் அழுகைக்கும் காரணம் கண்டுபிடித்து

ஆறுதலுக்காய் தோள் சாய்ந்து

அழகாய் காதல் செய்தேன்.

என் காதலிலும் சண்டைகள் இருந்தன

கோபங்களும் வெளிப்பட்டு போனது .

சண்டைகளுக்கான சமாதனங்களும் மிக கச்சிதமாய் தெரிக்கப்பட்டன.

அழகான அந்த நாட்களில்

அரட்டைகள் அடித்ததும்

அடிபட்டு உண்டதும்

என்றென்றும் நீங்காத நினைவுகளாக

இதயங்களில் இடம்பிடித்து போனவை

பள்ளிக்காதல் என்றென்றும் என் முதல் காதல்...

About the Competition

The Global Poetry and Creative Writing Competition 2026 by Hashtag Kalakar is a prestigious platform celebrating diverse voices and creative expression. It gathers talented individuals from around the globe to share their unique stories and artistic visions, fostering a vibrant community of literary enthusiasts and creators.

Thank you, Rusjanthi Piratheepan, for your beautiful contribution to the Global Poetry and Creative Writing Competition 2026. "முதல் காதல்" is a touching exploration of first love that resonates deeply. Your participation enriches the tapestry of voices that make this competition truly special.

About Hashtag Kalakar

Hashtag Kalakar is a creative platform dedicated to providing artists, writers, singers and other creative talents with opportunities to showcase their work and reach wider audiences through competitions, features and creative initiatives.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page