முதல் காதல்
- Hashtag Kalakar
- May 9, 2023
- 2 min read
By Dinesh Elumalai
Tamil Version: - முதல் காதல்
தலைவன் தலைவிக்கு, நான்
சிறை புகுந்த, அந்த-
பிறை வயிற்றை கண்ட நாள் – முதல் காதல் கொண்டனர்
ஈரேழு வாரத்தின் முடிவில்
மீயொலி நோட்டம் சென்று
எந்தன் வளர்ச்சி கண்ட நாள் – முதல் காதல் வளர்த்தனர்
மகப்பேறு பல கண்ட
மருத்துவர் மத்தியில், மழலையாய்
அழுகுரல், இனிக்கும் நேரம் – முதல் காதல் பிறக்கும்
அன்றாடம் கேட்டறிந்த மொழிதான்!
ஆயினும், பிள்ளை அமுதவாய்
திறந்து, அம்மா என்றது – முதல் காதல் அதிகரிக்கும்
தாய் தந்தை தள்ளி இருக்க
தவழும் நான் தனித்திருக்க
தமக்கை தாலாட்டும் அந்நொடி – முதல் காதல் வளரும்
காலைக் கவலையுடன் சென்றோம்
அதட்டும் ஆசிரியர் மத்தியில்
ஆறுதலாய் நட்பின் பிடியில் இருக்கும் நேரம் – முதல் காதல் பிறந்தது
பருக்கள் தோன்றும் பருவம்!
தேவதை போன்ற உருவம்!
ஓரக்கண்ணால் பார்த்த நொடி – முதல் காதல் அறிந்தேன்
கனவைச் சேர்த்து வைத்து
கண்ணியவள் கரம் பிடித்து
வேள்வியை வலம்வந்த அந்நேரம் – முதல் காதல் உணர்ந்தேன்
என்னிடம் கேட்டனர், இங்கே-
எது, முதல் காதல் என்று
நான் அறிந்தவை கொண்டு
எது முதல் காதல் என்று
எடுத்துரைத்தேன், இனிக்கும் எம்மொழி
உமக்கு விளக்கும் அந்நேரம் – முதல் காதல் சிறக்கும்!
English Translation : - First Love
The first day I was formed in my mother's womb,
My Parents fell in love with me,
First trimester scan and seeing my growth,
My parents loved me even more,
Amidst group of gynos in the labor room,
My parents hear my cry - a very faint voice,
They see me and fall in love all over again,
Though they have heard the word,
The first time I say Amma, their love for me increases,
When my parents are engaged and my sister holds me in her arms,
Her love for me increases every time,
As I reach my adolescence and feel emotions,
Every time I secretly see my girl,
I realised my First Love,
With loads of dreams, as I hold my girl's hand,
I felt my First Love,
To answer, which is my first love?
I would gladly express All the above.
By Dinesh Elumalai

Comments