முதல் காதல்
By Jency Priya
இமைகள் திறந்த நாள் முதல்
மனதில் அழகென பதிந்த
முதல் முகம்
உனதாயிருக்க...
பிரிவென்றால் நீ இல்லா நாளென
தெவிட்டாமல் தேடிய
முதல் தேடல்
நீயாயிருக்க...
கண்ணோடு கண்சேர
கன்னங்கள் நிறம் மாற,
கற்றுக்கொண்ட முதல் நாணம்
உன்னாலிருக்க...
மறப்பேனோ உன்னை
மார்பில் இதயம் என்பது துடிக்கும் வரை!
By Jency Priya

Comments